Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம் படத்தின் டப்பிங் உரிமை எவ்வளவு கோடி தெரியுமா ? புத்திசாலியான லோகேஷ் கனகராஜ்

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் அனைவரும் வாழ்க்கையில் வெற்றியை அடைவார்கள் என்பது நிதர்சனமான உண்மை. சந்தர்ப்பம் சரியாக அமைந்து அதை சரியான விதத்தில் நாம் நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அந்தவகையில் மாநகரம் ,கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் “லோகேஷ் கனகராஜ்” விஜய்யை வைத்து வேற லெவல் “மாஸ்டர் “படத்தைக் கொடுத்தார்.

இதுவரை விஜய் ரசிகர்கள் பார்க்காத ஒரு கோணத்தில் பிரபோசராக விஜய் நடித்து இருந்தது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. மாஸ்டர் திரைப்படம் லாக்டோன் நேரத்திலும் வசூல் சாதனையை படைத்தது. 2021ல் வெளிவந்த திரைப்படங்களிலேயே உலக அளவில் அதிக வசூல் செய்த 50 திரைப்படங்களில் ஒரே இந்திய திரைப்படம் மாஸ்டர் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பிரபல இயக்குனராக மாறி விட்ட போதும் அவருக்கு அவருடைய குருநாதரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாகும். அந்த ஆசையும் தற்போது நிறைவேறி கொண்டிருக்கிறது. அவருடைய குரு “கமலஹாசனை” வைத்து “விக்ரம் “என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.

vikram-cinemapettai

vikram-cinemapettai

மேலும் எந்தவொரு கதாபாத்திரத்தையும் அப்படியே ஏற்று நடிக்கும் இருபெரு பலமும் இந்த திரைபடத்தில் இணைகிறது.” விஜய் சேதுபதி” முக்கிய கதாபாத்திரத்திலும் “பகத் பாசில் “வில்லனாகவும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தி டப்பிங் தேவைக்காக அதிக விலையை பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம்.

திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி ,கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. திரைப்படங்கள் பொதுவாக இந்தி டப்பிங் செய்யும் பொழுது அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். இதற்கு முன்பு தர்பார், சர்க்கார் ,மாஸ்டர், பிகில் உள்ளிட்ட திரை படங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டு இருந்த திரைப்படங்களாகவும் ,இதைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் இந்தி டப்பிங் உரிமை 25 கோடி என்று இந்த நிலையை நிலையில் அனைத்தையும் முறியடித்து விக்ரம் திரைப்படம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்திற்கான இந்தி டப்பிங் உரிமை ரூபாய் 35 கோடிக்கு விலை போய் இருப்பதாக இந்தியா செய்திகள் வெளியாகியுள்ளன .அறிந்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். திரை உலகில் பிரம்மாண்ட நாயகன் இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த கமல் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் ஒருசில உட்பூசல்கள் காரணமாக ,லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கமலஹாசன்.

Continue Reading
To Top