மாஸ்டரில் கோட்டை விட்டுவிட்டேன்.. விரக்தியில் பேசிய லோகேஷ் கனகராஜ்

இந்திய சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர் கொடுத்த வாய்ப்பை இப்படி கோட்டை விட்டுவிட்டேன் என மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் புலம்பித் தள்ளியுள்ளார். அதற்கு காரணம் அவர் எதிர்பார்த்தபடி மாஸ்டர் படம் அமையவில்லை என்பதுதான்.

தளபதி விஜய் படங்களை பொறுத்தவரை படம் சுமாராக இருந்தாலும் வசூல் தாறுமாறாக அள்ளிக் குவிக்கும். விஜய் என்ற பெயருக்குத் தான் ரசிகர்கள் வருகிறார்களே தவிர அவர் எந்த மாதிரி படம் நடித்துள்ளார் என்பதைப் பொருத்து அல்ல.

என்னதான் சமூக வலைதளங்களில் விஜய் படம் படுமொக்கை என விமர்சனங்கள் வெளிவந்தாலும் தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக வரிசைகட்டி விஜய் படம் பார்க்க நிற்கின்றனர் என்பதை அதிகாரபூர்வமாக ஆதாரத்துடன் பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படி ஒரு ஸ்டார் படத்தை சொதப்பி விட்டேனே என லோகேஷ் கனகராஜூக்கு கொஞ்சம் மன வருத்தம் இருப்பது சமீபத்திய பேட்டியில் தெரியவந்துள்ளது.

vijay-lokesh-kanagaraj-cinemapettai
vijay-lokesh-kanagaraj-cinemapettai

மாஸ்டர் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். சிலருக்கு முதல் பாதியில் திருப்திகரமாகவும், சிலருக்கு இரண்டாம் பாதி திருப்திகரமாகவும் அமைந்தது. ஆனால் முழு படமும் யாரையும் திருப்திப்படுத்தவில்லை விஜய் ரசிகர்களைத் தவிர. பலரும் ஒரே காரணமாக சொன்னது படத்தின் நீளம் தான்.

அதற்கு லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் அதற்கு பதில் கூறியுள்ளார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இரண்டு பெரிய நட்சத்திரங்களும் இருப்பதால் இருவருக்குமான முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன் எனவும், அதை மையப்படுத்தி நிறைய விஷயங்களை மாஸ்டர் படத்தில் கோட்டை விட்டுவிட்டேன் எனவும் ஓப்பனாக கூறியுள்ளார்.

மேலும் விமர்சனங்கள் வருவது நல்லது தான் எனவும், அதிலிருந்து அடுத்தடுத்த படங்களில் எப்படி ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் லோகேஷ், கமல் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் பாணியில் உருவாகும் திரைப்படம் என்பதையும் அதிரடியாக தெரிவித்துள்ளார் லோகேஷ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்