Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி, கமல் இப்போதைக்கு வேண்டாம்.. அவரு படம் தான் சரி என முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ்!
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் யார் படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் இரண்டே படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் உச்சத்தை அடைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கோடிகளில் சம்பளம், அடுத்தடுத்த பட வாய்ப்பு என மொத்த சினிமா உலகமே இவரை பார்த்து மிரளுகிறது.
இவருடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் கதையுடன் கமர்ஷியல் கலந்து ஹிட் கொடுப்பது தான். இன்றைய முன்னணி நடிகர்களுக்கும் அதுதான் தேவை.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தார். ஆனால் அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் தற்போது வேறு ஒரு பக்கம் சென்று விட்டாராம்.
தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் அட்வான்ஸ் கொடுத்துள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் அல்லு அர்ஜுன் அல்லது மகேஷ்பாபு ஆகிய இருவரில் ஒருவரை வைத்து படத்தை இயக்க உள்ளாராம்.
ஆனால் அதற்கு முன்னராக தனக்கு பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து விடலாம் என அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.
கார்த்தியும் கைதி-2 படம் இப்போது வந்தால் தன்னுடைய மார்க்கெட் இன்னும் பலம் ஆகும் என மற்ற படத்தின் வேலைகளை சற்று ஒதுக்கிவிட்டு கைதி-2 படத்துக்காக வெயிட் செய்கிறாராம்.
