Connect with us
Cinemapettai

Cinemapettai

master-quit-pannuda-lyric-video

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.. அண்ணா வந்தா ஆட்டம் பாம்! 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தமிழகத்தில் இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்பது நாம் அறிந்ததே.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி  ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் தான் ‘மாஸ்டர்’. இந்தப் படம் இந்த வருடம் ஏப்ரல் மாதமே ரிலீசுக்காக ரெடியாகி இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக திரையிடப் படாமல் இருந்தது.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியையும் நேரத்தையும் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தளபதியின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

அதாவது கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடி இருப்பதால் மாஸ்டர் படம் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

மேலும் இந்த படத்தினை காண தளபதி ரசிகர்கள் வெறியுடன் காத்துக் கொண்டிருந்தநிலையில், தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படம் வெளியாகாது என அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆணித்தனமாக கூறியதால் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர் விஜய் ரசிகர்கள்.

இவ்வாறிருக்க லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகும் தேதியையும் நேரத்தையும் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி லோகேஷ் கனகராஜ் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 14ஆம் தேதி 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் டீஸரை வெளியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த தளபதியின் ரசிகர்கள் ‘தீபாவளிக்கு படம் வரலைன்னா என்ன.. டீசர் ஆச்சும் வருதே’ என்ற நிம்மதியில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top