Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படம் பற்றி லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9ஆம் தேதி 2020 ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய படம் 2021க்கு சென்று விடும் போல.
ஏற்கனவே ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லரை கூட ரிலீஸ் செய்யாமல் படக்குழுவினர் ரசிகர்களை சோதித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க மாஸ்டர் படம் அமேசான் தளத்தில் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக பல தகவல்கள் தவறாக பரவிக் கொண்டிருக்கின்றன.
என்னதான் படக்குழுவினர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று கூறினாலும் மாஸ்டர் படத்தை பற்றிய வதந்திகள் அந்த படம் வெளியாகும்வரை சுற்றிக் கொண்டுதான் இருக்கும் போல.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தைப் பற்றி கூறிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவையில் விஜய் ரசிகர்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படம் கண்டிப்பாக தியேட்டரில் மட்டும் தான் வெளியாகும் என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.
எக்காரணத்தைக் கொண்டும் OTT தளத்தில் வெளியாகாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

master-lokesh
