விக்ரம் படத்தில் நடித்துள்ள லோகேஷ் கனகராஜ்.. ட்ரெய்லரில் இருக்கும் எக்கச்சக்க டிவிஸ்ட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

அந்த டிரைலரில் இடம் பெற்ற ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் ஆக்சனில் மிரட்டி இருக்கும் கமல்ஹாசனின் நடிப்பு தற்போது ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. அதனால் நேற்று டிரைலர் வெளியான நிமிடத்தில் இருந்தே ஏகப்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

மேலும் திரையை விட்டு நம் கண்களை அகற்ற முடியாத அளவுக்கு டிரைலரின் ஒவ்வொரு காட்சிகளும் அனைவரையும் அசத்தியுள்ளது. அதனால் தற்போது நெட்டிசன்கள் ட்ரைலரை ரிப்பீட் மோடில் பார்த்து பல விஷயங்களை நோட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் ட்ரெய்லரில் அவர் வரும் ஒரு காட்சியை கண்டுபிடித்த ரசிகர்கள் அதை சோசியல் மீடியாவில் பரப்பி வந்தனர். இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சண்டைக் காட்சியில் வருவதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இவர் ஒரு காட்சியில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது விக்ரம் திரைப்படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் ஒரு சண்டைக் காட்சியில் நெருப்பு பற்றி எரியும் படி காட்டப்பட்டிருந்தது.

அந்த காட்சியில் தான் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். அதை கண்டு பிடித்த ரசிகர்கள் தற்போது அந்த போட்டோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் டிரைலரில் இது போன்ற இன்னும் பல விஷயங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் தேடி வருகின்றனர். அந்த வகையில் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி படம் வெளியாவதற்கு முன்பே வெற்றி கூட்டணியாக பார்க்கப்பட்டு வருகிறது.

vikram
vikram

Next Story

- Advertisement -