பணம் மட்டும் தான் முக்கியம் லோகேசா.. அட போப்பா! என் ரூட்டே வேற நெல்சா

நெல்சன் வாங்கும் சம்பளத்தை விட லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் குறைவு என்ற செய்தி தற்போது வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வருகிறது.

இதனிடையே நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தையும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். தளபதி விஜய்யை வைத்து நெல்சனுக்கு தரமான படம் கொடுக்க முடியவில்லை என அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தலைவர் 169 திரைப்படத்தை இயக்கயுள்ளார்

இத்திரைப்படத்தை இயக்கும் முன்பாகவே பல சிக்கல்களில் மாட்டி உள்ள நெல்சன், இப்படத்திற்காக 20 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ள விக்ரம் 3 படத்திற்காக 10 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். மேலும் தனக்கு படத்தை இயக்குவது தான் முக்கியம், பணம் முக்கியம் இல்லை என தெரிவித்தார். இவருடைய பெருந்தன்மையையை பார்த்த கமலஹாசன் மேலும் 2 கோடி உயர்த்தி 12 கோடியாக சம்பளத்தை கொடுத்துள்ளார்.

மாநகரம்,கைதி,மாஸ்டர்,விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் வெறும் 10 கோடி மட்டுமே சம்பளமாக கேட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தான் இயக்கிய 3 படங்களில், 2 படங்கள் மட்டுமே ஹிட்டான நிலையில், 20 கோடி நெல்சன் சம்பளமாக வாங்கியுள்ளது, சற்று ஓவராக உள்ளதென ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

விக்ரம் திரைப்படம் தற்போது வரை 300 கோடி வசூலை ஈட்டியுள்ளது,இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் கண்டிப்பாக 500 கோடியை தாண்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வளவு கோடி வசூல் சாதனை படைத்து விட்டு லோகேஷ் கனகராஜ் 10 கோடி மட்டுமே சம்பளமாக வாங்குவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே லோகேஷ் கனகரராஜையும், நெல்சோனையும் ஒப்பிட்டு பல மீம்ஸ்கள் மற்றும் கமெண்ட்டுகள் வந்த நிலையில், கண்டிப்பாக அவருடைய திரைப்படம் வெற்றியடையும் என தனது நண்பன் நெல்சனை விட்டுக்கொடுக்காமல் லோகேஷ் கனகரராஜ் பேசியது, யாராலும் மறக்கமுடியாது.இப்படி ஒரு பெருந்தன்மையான இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது பெருமையாக உள்ளது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்