செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சிவகார்த்திகேயனுடன் அந்த மாதிரி கேரக்டர் நடிக்க மாட்டேன்.. வாரிசு நடிகருக்கு வழி விட்ட லோகேஷ்

சிவகார்த்திகேயனுடன் நடிக்க பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மறுத்துவிட்டதாகவும் ஏன் சேர்ந்து அவருடன் நடிக்கவில்லை என்பதற்கான காரணங்களும் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி வரும் நிலையில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி, தற்போது கமலின் ராஜ்கமல் இண்டர் நேசனல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இந்தியா தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் ஸ்ரீகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார், பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘எஸ்.கே 23’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். அடுத்து, டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 24வது படம் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுக்குப் பதிலாக ‘புறநானூறு’ படத்தில் நடிக்கவுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமா முன்னணி நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார். சூர்யா நடிக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயேன் நடிக்கிறார் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு தம்பி கேரக்டர் இருப்பதாகவும், அதில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜை அணுகியுள்ளனர் படக்குழு. ஆனால், அவருக்கு நான் தம்பியாக நடித்தால் நன்றாக இருக்காது என்று கூறி அப்படத்தில் இருந்து நழுவியுள்ளார் லோகேஷ். இது நெகட்டிவ் கேரக்டராக இருக்கும் என்பதால் அவர் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜுக்குப் பதிலாக அந்தக் கேரக்டரில் நடிக்க வைக்க அதர்வாவை படக்குழு அணுகியுள்ளது. தற்போது அதர்வா ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி வரும் நிலையில், ஆகாஸ் பாஸ்கரன்தாரன் புறநானூறு படத்தின் தயாரிப்பாளர் என்பதால் நிச்சயமாக சிவகார்த்திகேயனுக்கு தம்பி கேரக்டரில் அதர்வா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வில்லன் கேரக்டருக்கு ரோசன் மேத்யூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதி தான் தொடங்கவுள்ளதாகவும், இதற்கிடையில் நடிகர்கள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், ஒரு ஆல்பம் மற்றும் ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ள லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்க தயங்கிய நிலையில், அதர்வா ஏற்கனவே ஹீரோவாக நடித்து வருபவர். அவர் எப்படி சிவகாவுக்கு தம்பியாக நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் நயன்தாராவுக்கு தம்பியாக அதர்வா நடித்திருந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News