கமல் சார், உங்களுக்கு டாட்டா.. 1000 கோடி வசூல் நடிகருடன் கூட்டணி போடும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே தன்னுடைய படங்களின் மூலம் முன்னணி நடிகர்களை கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றன.

இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய குருநாதர் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இடையில் தேர்தல் வந்ததால் கமல் எலக்ஷனில் பிஸியாகிவிட்டார்.

இதன் காரணமாக விக்ரம் படத்தின் கதையை எழுதி வைத்து விட்டு மூன்று மாதத்திற்கு மேல் சும்மா இருந்து கொண்டிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையில் தளபதி 66 படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

கைதி படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வந்தனர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் ஏற்கனவே தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் லோகேஷுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் கொடுத்து கைவசம் வைத்துக் கொண்டனர்.

தற்போது கமல் படம் தொடர்ந்து தள்ளிக் கொண்டே செல்வதால் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு நிறுவனம் ஒன்றுக்கு தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் செய்யும் வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ள செய்தி தான் இன்றைய கோலிவுட் ஹாட் டாப்பிக்.

lokesh-prabhas-cinemapettai
lokesh-prabhas-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்