Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படமே வரல.. அதுக்குள்ள அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
மேலும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் குறித்த தேதியில் வெளியாகாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை கூட வெளியிடாமல் ரசிகர்களை நோகடித்து வருகிறது மாஸ்டர் படக்குழு.
இந்நிலையில் திடீரென லோகேஷ் கனகராஜிடமிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் மாஸ்டர் படத்தைப் பற்றிய அப்டேட் ஏதாவது இருக்கும் என ரசிகர்கள் தேடிச் சென்றனர்.
ஆனால் நடந்ததோ வேறு. லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நான்காவது படத்திற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் மீண்டும் தளபதி ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் அடுத்தது யாரை இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டது.
பெரும்பாலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.
