fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரு மாசம் டைம் கொடுங்க, அந்த படத்தை முடிச்சிடலாம்.. அதிரடி காட்டும் லோகேஷ்.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

lokesh-kanagaraj-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு மாசம் டைம் கொடுங்க, அந்த படத்தை முடிச்சிடலாம்.. அதிரடி காட்டும் லோகேஷ்.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ்(Lokesh Kanagaraj) தான். அதுவும் மாஸ்டர் படத்திற்கு பிறகு அவரது ரேஞ்சே வேற தான் என்று சொல்லலாம். கோடிகளைக் கொடுத்து அவரை புக் செய்ய பல தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். இவரிடம் அனைவருக்கும் பிடித்ததே குறைந்த பட்ஜெட்டில் பெரிய லாபம் கொடுப்பது தான்.

எப்போதும் கடந்த வந்த பாதையை மறக்கக் கூடாது அல்லவா. அந்த வகையில் முன்னதாக சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அதே படத்தின் இரண்டாம் பாகத்தை வெறும் ஒரு மாதத்தில் முடித்துக் கொடுக்கிறேன் என கூறியுள்ளாராம்.

லோகேஷ் கனகராஜ் முதன்முதலில் மாநகரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அனைவரையும் அசர வைத்தது. அதற்கு அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கினார்.

கைதி படத்தின் டிரைலர் வெளியாகும் போதே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. அதேபோல் படமும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தனது இரண்டாவது படத்திலேயே 100 கோடி வசூல் கொடுத்து அனைவரையும் மிரட்டினார் லோகேஷ்.

தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருந்தார்.

ஆனால் அந்தப்படம் உருவாவதில் இழுபறி நீண்டு கொண்டிருப்பதால் உடனடியாக கார்த்தியை வைத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டாராம். ஏற்கனவே இந்த படத்தின் கதை தயாராக இருந்ததால் கொஞ்சம் வேலை மட்டும் பாக்கி இருக்கிறதாம்.

வெறும் ஒரு மாதம் டைம் கொடுத்தால் இந்த படத்தை முடித்து விடுவேன் என கார்த்திக்கிடம் கூறியுள்ளார். உடனடியாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு உடனடியாக கைதி 2 படத்தை முடித்துவிடலாம் என பிளான் செய்து விட்டார்களாம்.

Continue Reading
To Top