fbpx
Connect with us

Cinemapettai

லோகேஷ் கனகராஜிடம் எக்குத்தப்பாக சண்டைக்கு போன பிரபல இயக்குனர்.. டிவிட்டர் மோதலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜிடம் எக்குத்தப்பாக சண்டைக்கு போன பிரபல இயக்குனர்.. டிவிட்டர் மோதலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். மாநகரம், கைதி என்ற இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகிய நிலையில் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனராக மாறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் அடுத்ததாக வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே படத்தை பார்த்த விஜய் ஏகபோகமாக பாராட்டித் தள்ளி விட்டாராம்.

இது ஒருபுறமிருக்க அடுத்ததாக லோகேஷ் கனகராஜுக்கு தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலிருந்தும் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடப் போவதாக லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் அறிவித்ததைத் தொடர்ந்து பிரபல இளம் இயக்குனர் அவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.

மாஸ்டர் படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியவர் ஆடை பட இயக்குனர் ரத்தினகுமார். லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தப்பட அறிவிப்பின் போது, இவர் மீம் வெளியிட்டு மாஸ்டர் அப்டேட் எப்போது என்பதை போல கிண்டலாக கேட்டுள்ளார்.

மேலும் விளையாட்டுக்கு அவருடன் சண்டை போடுவதைப் போல அந்த ட்வீட் இருந்ததால் ரசிகர்கள் அதனை பெரிதும் ரசித்து ரீட்வீட் செய்துள்ளனர்.

lokesh-ratna-tweet

lokesh-ratna-tweet

அனைவருமே மாஸ்டர் படத்திற்கு வெறித்தனமாக வெயிட் செய்து கொண்டிருக்கும்போது லோகேஷ் கனகராஜ் அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் அடுத்த படத்திற்கு செல்வது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

Continue Reading
To Top