லோகேஷ் கனகராஜ் யாருக்கு ஓட்டு போட்டார் தெரியுமா? வசமாக காட்டிக்கொடுத்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். வழக்கமான சினிமாவை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்த்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு படங்களை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக உள்ளார். இடையில் லோகேஷ் கனகராஜ் கொரானா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரிந்த விஷயம்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்து விட்டதாகவும் எல்லாரையும் ஓட்டு போடும்படி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார். அப்போதுதான் லோகேஷ் கனகராஜ் யாருக்கு ஓட்டு போட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர வெறியன் லோகேஷ் கனகராஜ். அப்போ அவருடைய கட்சிக்கு தானே ஓட்டு போட்டிருப்பார். அதுமட்டுமில்லாமல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவருக்கு பின்னால் உள்ள தொலைக்காட்சியில் அபூர்வ சகோதரர்கள் படம் ஓடிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை லோகேஷ் கனகராஜின் நண்பர்கள் சாந்தனு மற்றும் ரத்தினகுமார் இருவரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் போட்டு அவரை கலாய்த்துள்ளனர். இவர்களது ஜாலியான உரையாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

lokesh-kanagaraj-cinemapettai
lokesh-kanagaraj-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்