அட்லீய விட லோகி தான் மாஸ்.. ரஜினியுடன் மோத பாலிவுட்டின் பெரிய தலையை லாக் செய்த சம்பவம்

Lokesh Kanagaraj: எப்படி பார்த்தாலும் இயக்குனர் அட்லியை விட இப்போ லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்னு சொல்லலாம். அது எப்படி லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவுக்கு வரும்போது அட்லி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு பாலிவுட்டுக்கே போய்விட்டாரே என்று தோன்றலாம்.

ஆனால் இன்றைய தேதி படி அட்லீயை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு படி மிஞ்சி விட்டார். இயக்குனர் அட்லி இங்கிருந்து பாலிவுட் சினிமாவுக்கு சென்று இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து படம் இயக்கினார்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் மற்றொரு சூப்பர் ஸ்டாரை தமிழ் சினிமாவுக்கே வரவழைக்க இருக்கிறார். இங்கிருந்து இயக்குனர்கள் போய் அங்குள்ள ஹீரோக்களை வைத்து இயக்குவதை விட, அவர்களை இங்கு வர வைப்பது தான் உண்மையிலேயே கெத்தான விஷயம்.

பெரிய தலையை லாக் செய்த சம்பவம்

அதே தான் லோகேஷ் செய்ய இருக்கிறார். லியோ பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு வழக்கம் போல அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் சூப்பர் ஹீரோ உபேந்திரா இந்த படத்தில் ஒப்பந்தமாக இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

படத்தின் போட்டோ ஷூட்டுகள் கடந்த ஜூலை மாதம் நடந்து முடிந்தது. ரஜினிக்கு வெயிட்டான ஒரு வில்லனை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்து இருக்கிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்து இருப்பது பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் அமீர்கான் தான்.

தற்போது படத்தின் கதை பற்றியும், அவருடைய கேரக்டர் பற்றியும் லோகேஷ் கனகராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. கண்டிப்பாக ரஜினியுடன் பணி புரிய பாலிவுட் நடிகர் அமீர்கான் நோ சொல்ல மாட்டார்.

திரையில் ரஜினி vs அமீர்கான் காம்போவை பார்க்க தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Next Story

- Advertisement -