Connect with us
Cinemapettai

Cinemapettai

lokesh-kanagaraj-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக பிரபல நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. இரட்டிப்பு எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தற்சமயம் உள்ள இயக்குனர்களில் ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்று வைத்துள்ளவர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் ரசிகர்களை பெருமளவில் இம்ப்ரஸ் செய்து வருகிறார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தன்னுடைய குருநாதர் கமலஹாசனை வைத்து விக்ரம் எனும் படத்தை எடுத்து வருகிறார். உடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இப்போது தான் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் லோகேஷ் கனகராஜ் அடுத்த படம் பற்றிய செய்தி கோலிவுட் வட்டாரங்களில் மெல்ல மெல்ல உலா வந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் முதல்முறையாக நடிகர் சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யா ஏற்கனவே இணைந்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தில் பணியாற்ற இருந்ததாகவும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியாகி இணையத்தை கலக்கியது குறிப்பிடத்தக்கது.

அப்போது ஏமாற்றம் அளித்த இந்த கூட்டணி தற்போது மணிரத்னம் மற்றும் சங்கர் மூலம் மீண்டும் இணைய உள்ளதாம். சமீபத்தில்தான் ஷங்கர் மணிரத்னம் இருவரும் இணைந்து Rain on Films என்ற தயாரிப்பு கம்பெனியை தொடங்கினர்.

மேலும் மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜி படத்தில் சூர்யா ஒரு பகுதியில் நடித்திருந்தார். இதனாலேயே லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யா கூட்டணி உருவாவது உறுதியாகியுள்ளது.

suriya-lokesh-cinemapettai

suriya-lokesh-cinemapettai

Continue Reading
To Top