Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிசம்பரில் முடியும் தளபதி 64 படப்பிடிப்பு.. தயாரிப்பாளர்களின் தங்கமகனாக மாறிய லோகேஷ்
தற்போதைய இளம் இயக்குனர்களின் முக்கியமான இயக்குனராக கருதப்படுபவர் லோகேஷ் கனகராஜ். இவரது கதை திறமையை கண்டு வியந்த தளபதி விஜய், இவருக்கு தளபதி 64 படத்தை இயக்க வாய்ப்பு அளித்தார்.
அதற்கு முன்பாக மாநகரம், கைதி என்ற படங்களில் கதாநாயகி, பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்குமட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
கமர்ஷியல் படங்களாக செல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்போது தளபதி விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், தனது கதை திறமையாலும் படப்பிடிப்பு வேகத்தாலும், மேலும் தயாரிப்பாளர்களுக்கு சிக்கனமாகவும் செலவு செய்வதால் தளபதி விஜய் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம்.
இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை முடித்துள்ள லோகேஷ், இந்த மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கு இடையேயான சண்டை காட்சியை படம் பிடிக்க உள்ளாராம்.
போகிற வேகத்தில் டிசம்பர் மாதத்திலேயே மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என தயாரிப்பாளர் தரப்பு சந்தோஷமாக கூறி வருகின்றனர். புத்தாண்டன்று தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
