Connect with us
Cinemapettai

Cinemapettai

lokesh-kanagaraj-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தெலுங்கிலும் கொடிகட்டி பறக்கும் லோகேஷ் கனகராஜ்.. கோடிகளைக் கொட்டும் தயாரிப்பாளர்கள்!

லோகேஷ் கனகராஜ் எனும் திறமையான இளம் இயக்குனரை சுற்றித்தான் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களின் பார்வை உள்ளது.

மாநகரம் எனும் வெற்றிப் படத்தின் மூலம் தனது கேரியரை தொடங்கிய லோகேஷ் கனகராஜ் 2-வது படமான கைதி எனும் படத்தின் மூலம் 100 கோடி வசூலை கொடுத்தார்.

இத்தனைக்கும் வெறும் கதையை நம்பி மட்டுமே அந்த படம் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் உடனடியாக தனது அடுத்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் புக் செய்தார் விஜய்.

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது மாஸ்டர். படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

படம் எப்போது வந்தாலும் பிளாக்பஸ்டர் தான் என்பதை போல உறுதியாக இருக்கிறார்கள் சினிமா வட்டாரங்களில். அந்த வகையில் அடுத்ததாக கமல் ரஜினி கூட்டணியில் ஒரு படத்தையும், கார்த்தி நடிக்கும் கைதி-2 படத்தையும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இதற்கிடையில் தெலுங்கில் பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் கொடுத்து அவரை புக் செய்து வைத்துள்ளார்களாம்.

அனேகமாக அந்த படத்தில் அல்லு அர்ஜுன் அல்லது மகேஷ்பாபு ஆகிய இருவரில் யாராவது ஒருவர் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம். அதுவும் கோடிக்கணக்கில் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்களாம்.

லோகேஷ் கனகராஜின் திறமைக்கு சான்றாக இன்னும் என்ன வேண்டும். தமிழில் கலக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது தெலுங்கில் கொடிகட்டி பறக்க சினிமாபேட்டை சார்பாக வாழ்த்துக்கள்.

Continue Reading
To Top