புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

லோகேஷ் கனகராஜின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.? அர்ஜுன் தாஸ் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மிகக் குறுகிய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய இயக்குனராக யாருமே வளர்ந்தது இல்லை. அப்படி தன்னுடைய திறமையால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

பெரிய அளவு பிரபலமில்லாத நடிகர்களை வைத்துக்கொண்டு கதையை மட்டும் வைத்து களமிறங்கி மாநகரம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கவனிக்கப்படும் நடிகரான கார்த்தி உடன் சேர்ந்து கைதி படத்தை கொடுத்தார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய்யின் பிகில் படத்துடன் மோதி கைதி படம் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி அதிலும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனையை செய்து காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படம் உலகமெங்கும் வசூலை வாரி குவித்து வருகிறது. இத்தனைக்கும் வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் அப்போவும் கோடிக்கணக்கில் வசூல் சாதனை செய்து வருகிறது.

ஆனால் முதல் இரண்டு படங்களிலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் மூலம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் நான் தான் எனவும் விஜய் சாருக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து கதையில் சில சொதப்பல்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் அடுத்த படத்தின் மூலம் நெகட்டிவ் விமர்சனங்களை பாசிட்டிவாக மாற்ற முயற்சி செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

arun-das-lokesh-family
arun-das-lokesh-family

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவருடைய பெற்றோர்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் செம வைரலாகியுள்ளது.

- Advertisement -

Trending News