Connect with us
Cinemapettai

Cinemapettai

lokesh-upcoming-movies

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐந்து வருடத்திற்கு கைதான கைதி லோகேஷ் கனகராஜ்.. அடுத்து வரபோகும் ஐந்து அதிரடி படங்களின் லிஸ்ட்

சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் முதலிடத்தில் உள்ளார். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தில் நடிகை, பாடல் இல்லாமல் விறுவிறுப்பான காட்சிகளை வைத்து பிரமாண்ட வெற்றி பெற்றார்.

அடுத்தபடியாக ஜாக்பாட் தான் தளபதி விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை எடுத்து வரும் தீபாவளிக்கு வெளிவர காத்துக் கொண்டு இருக்கின்றார். தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குனர் பட்டியலிலும் இடம் பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

தனது திறமையான இயக்கத்தின் மூலம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள லோகேஷ் கனகராஜ்க்கு அடுத்தடுத்த இயக்க போகும் படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கமலின் தயாரிப்பில் தலைவர் 167 வது படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படத்தில் சிக்கல் உள்ளதால் அதில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பிருகிறது,

அதற்கு பின்னர் குறுகிய காலகட்டத்தில் கார்த்திக்குடன் இணைந்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் தளபதியின் கூட்டணியில் மற்றுமொரு படத்தை பிரமாண்டமாக எடுக்க உள்ளனர்.

நான்காவது படமாக சூர்யாவுடன் இணைந்து ஏற்கனவே உருவாக இருந்து கைவிடப்பட்ட ‘இரும்புக்கை மாயாவி’ என்ற படத்தை இயக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து விக்ரம் அல்லது துருவ் விக்ரம் வைத்து எடுக்க வாய்ப்பு இருக்கிறதாம். விக்ரமிற்கு சொன்ன கதை படு மாஸ் கதையாம் அதனால் அவரது மகனுக்கு கிடைக்க வழி செய்வாராம் விக்ரம்.

இப்படி லோகேஷ் கனகராஜ்க்கு அடுத்த ஐந்து வருடம் வரை படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனை பார்க்கும் போது முன்னணி இயக்குனர்களுக்கு சற்று எரிச்சலாகவும், தலைசுற்றியும் விட்டதாம்.

Continue Reading
To Top