ராஜமவுலி பட நடிகரையே கொக்கி போட்டு தூக்கிய லோகேஷ்.. தம்பிக்கு உச்சத்தில் இருக்கும் குரு

கைதி, மாஸ்டர் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் படங்கள் வெளியாகாத நிலையில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணையுள்ள தகவலை கூறினார்.

இந்நிலையில் விக்ரம் படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் தற்போது பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ராம் சரணின் படத்தை லோகேஷ் இயக்குகிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.

ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் RC15 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67வது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதை எல்லாம் ரெடியாக வைத்துள்ளாராம். அதனால் இப்படத்திற்கு வெறும் ஆறு மாதம் மட்டுமே போதும் என்று சொல்லி உள்ளாராம். இதனால் இப்படத்தை விரைவாக முடித்துவிட்டு ராம்சரன் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும். மேலும் விக்ரம் படத்திலேயே லோகேஷ் பல சம்பவங்கள் செய்திருப்பதால் அடுத்தடுத்து இவருடைய படம் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னணி நடிகர்கள் இவருடைய படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்