மீண்டும் வரவுள்ள ரோலக்ஸ்.. லோகேஷ் எல்சியு-வில் உருவாக உள்ள கிடப்பில் போடப்பட்ட படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எல்சியு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. லியோ படத்தை பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் லியோ படத்திற்கு முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் வேட்டையாடியது. இந்த படத்தில் ஐந்து நிமிடத்தில் மட்டும் நடித்த சூர்யாவுக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. அவருடைய ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழு நிள படமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டு இருந்தார்.

Also Read : சூர்யாவை பழி தீர்க்க தயாராகும் பாலா.. புதிய யுக்தி மூலம் வேகம் எடுக்கும் வணங்கான்

ஆனால் விக்ரம் படம் தொடங்குவதற்கு முன்பே லோகேஷ், சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த படம் இரும்பு கை மாயாவி. ஏதோ சில காரணங்களினால் இந்த படம் அப்படியே தடைபட்ட போனது. இந்நிலையில் மீண்டும் இந்த படம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் மையக்கதை என்னவென்றால் ஒரு பெரும் விபத்தினால் தனது வலது கையை இழந்து, அதற்கு பதிலாக ஸ்டீல் செயற்கை கையை பொருத்திக் கொள்கிறார். மேலும் மற்றொரு விபத்தினால் அவருடைய எஃகு கையைத் தவிர அவரது உடல் முழுவதையும் மறைத்து விடும் திறனை பெறுகிறார்.

Also Read : சூர்யாவை ஓரம் கட்ட வரும் அருண் விஜய்.. கடைசி 5 படத்தில் வாங்கிய சம்பளத்தை கேட்டா தலை சுத்துது

இந்த படம் ரோலக்ஸ் உடன் தொடர்பு கொண்ட படமாக எடுக்கப்பட உள்ளது. இந்தச் செய்தி சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார். அதன் பிறகு லோகேஷ் கூட்டணியில் சூர்யா நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தச் செய்தி இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read : 3டி தொழில்நுட்பத்தில் உருவான 5 தமிழ் படங்கள்.. அடுத்தடுத்து களமிறங்கும் சூர்யா , சிவகார்த்திகேயன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்