Connect with us
Cinemapettai

Cinemapettai

kaithi-karthik

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் படத்திற்கு பாலிவுட்டில் செம டிமாண்ட்.. கைதியை தொடர்ந்து இன்னொரு படமும் ரீமேக்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ‘மாநகரம்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கார்த்திக்குடன் ‘கைதி’, தளபதியுடன் ‘மாஸ்டர்’ என பிஸியாக இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது நான்காவது படத்திற்காக உலக நாயகன் கமலஹாசனுடன் இணையவுள்ளார் என்னும் தகவலும் நாமறிந்ததே. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படத்தினை பிரபல இயக்குனர் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2017 ஆம் ஆண்டு முதன்முதலில் லோகேஷ் கனகராஜ் எடுத்த படம்தான் ‘மாநகரம்’. இந்தப்படத்தில் சுதீப் கிஷன், ஸ்ரீ மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தினை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய சந்தோஷ்சிவன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் விக்ராந்த் மாசி சிங் நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இயக்குனர் சந்தோஷ்சிவன் அவர்கள் சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒரு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படத்தினை ரீமேக் செய்வது லோகேஷ் கனகராஜ்க்கு கிடைத்த வெற்றியாக அவரது ரசிகர்கள் எண்ணுகின்றனர். லோகேஷ் கனகராஜின் இந்த அபாரமான வெற்றியையும் வளர்ச்சியையும் கண்டு அவரது ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
To Top