Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமலின் விக்ரம் படத்தையும் கைப்பற்றிய மாஸ்டர் நடிகர்.. இனி அதிரடிக்கு பஞ்சம் இருக்காது!

vikram-kamal-cinemapettai

மாஸ்டர் படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியாகும் வரை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலானது. தற்போது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தன்னுடைய குருநாதர் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான முதற்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து நிலையில் திடீரென தேர்தல் வந்துவிட்டதால் கமல்ஹாசன் அந்த வேலைகளுக்கு சென்று விட்டார். இதனால் படம் ஆரம்பிக்க முடியாமல் தடுமாறுகிறது.

தற்போது தேர்தல் முடிந்து இரண்டு மாதம் ஆன நிலையிலும் இன்னும் படப்பிடிப்பே தொடங்க முடியாத சூழல் தான் நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் அப்செட்டில் இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

சாதாரணமாகவே ஒரு படத்தை குறைந்த நாட்களில் எடுக்கும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை மட்டும் ஆரம்பிக்க முடியாமல் தடுமாறி விழுகிறார். ஒருமுறை ஆரம்பித்து விட்டால் அதை முடிக்கும் வரை ஓய்வு இல்லை எனக் கூறி விட்டாராம் தன்னுடைய குழுவினருக்கு.

இது ஒருபுறமிருக்க அடுத்தடுத்து விக்ரம் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க உள்ளார்களாம்.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான நடிகராக வலம் வரும் அர்ஜுன் தாஸும் விக்ரம் படத்தில் இணைந்துள்ள செய்திதான் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கைதி படம் ரேஞ்சுக்கு மாஸ்டர் படத்தில் அவருக்கு கதாபாத்திரம் அமையவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

விஜய் படத்திலேயே கேரக்டர் இல்லை என்றால் கமல் படத்தில் சொல்லவா வேண்டும் என்கிறது கோலிவுட் வட்டாரம். இருந்தாலும் அவர் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

arjun-das-cinemapettai

arjun-das-cinemapettai

Continue Reading
To Top