fbpx
Connect with us

Cinemapettai

ஆஹா! இவர்களுக்கும் காதல் பத்திக்கிச்சா.. லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் புகைப்படங்களால் பரபரப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆஹா! இவர்களுக்கும் காதல் பத்திக்கிச்சா.. லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் புகைப்படங்களால் பரபரப்பு

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா முடிந்த பிறகு விஜய் பேசியதைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசுகிறார்களோ இல்லையோ மாளவிகா மோகனன் மற்றும் லோகேஷ் கனகராஜ் பற்றிதான் பேச்சுக்கள் அதிகமாக வந்தவண்ணம் உள்ளன.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் போதே லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் மாளவிகா மோகனன். அப்போது லோகேஷ் தேங்க்ஸ் மேம் என சொன்னதற்கு மேம் ஆ? என ரிப்ளை செய்தார்.

சரி, இது எதார்த்தமாக தான் நடக்கிறது என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. லோகேஷ் கனகராஜ் உடன் மாளவிகா மோகனன் சிரித்து சிரித்து பேசிய வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ரசிகர்களை இன்னும் டென்சன் ஆகும் வகையில் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

malavika

malavika

அதுமட்டுமல்லாமல் ட்விட்டரில் ஒவ்வொரு மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியாகும் போதும் லோகேஷ் கனகராஜ் ட்வீட்டை மட்டும் மாளவிகா மோகனன் தனியாக எடுத்துப் போடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் லோகேஷ் கனகராஜ்-க்கு திருமணமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை கண்ட ரசிகர்கள் அசந்து இருந்த நேரத்தில் மாளவிகா மோகனனை அலாக்காக தூக்கி விட்டாரே என லோகேஷ் மீது செம காண்டில் இருக்கிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top