Politics | அரசியல்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. மோடி தப்புவாரா? களைகட்ட போகும் அரசியல்
மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

17வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் டெல்லியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மத்திய ஆட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும், அந்த வகையில் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதியுடன் பிஜேபி-யின் ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது.
தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் வரை அனைவரும் தங்கள் கூட்டணியை அறிவித்து தொண்டர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர். நம் தமிழ்நாட்டை பொறுத்த வரை அனைத்து கட்சியினரும் தங்கள் கூட்டணி மற்றும் ஆதரவு யாருக்கு என்பதை தெரிவித்து விட்டனர்.
வரும் தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர் இந்த வருடம் புதிதாக 8.4 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

election-2019
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது அதில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
