fbpx
Connect with us

கைதி படத்தில் நடிக்க வேண்டியது இந்த வில்லன் நடிகர் தானாம்.. ஆனால் நடித்தது கார்த்தி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கைதி படத்தில் நடிக்க வேண்டியது இந்த வில்லன் நடிகர் தானாம்.. ஆனால் நடித்தது கார்த்தி

தளபதி 64 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இரண்டாவது படமே கைதி. ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ள இப்படம் தீபாவளி ரீலிஸ் என்பது நாம் அறிந்த விஷயமே. மாநகரம் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் பாணரில் தான் படம் பண்ண கதை எழுதி இருக்கிறார். எனினும் அதிக பட்ஜெட் ஸ்க்ரிப்டுக்கு தேவை படவே அடுத்த கதையை நோக்கி சென்றுள்ளார்.

பின்னர் அவர் உருவாக்கியது தான் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானர், ஹீரோயின் இல்லாத கதையாம். முதலில் மன்சூர் அலி கான் அவர்களை மனதில் வைத்து தான் ரெடி செய்துள்ளார்.

இந்நிலையில் எஸ் ஆர் பிரபு, கார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என கூற, இயக்குனரும் அவரை சந்தித்து கதையை சொல்ல, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பின் தான் இந்த ப்ரொஜெக்ட் இந்தளவு பிரம்மாண்டமாக டேக் ஆப் ஆகியுள்ளது.

இந்த தகவலை மனோ பாலாவின் யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பெட்டியில் சொன்னார் இயக்குனர். இன்று மாலை 7 மணிக்கு ட்ரைலர் வெளியாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top