Tamil Cinema News | சினிமா செய்திகள்
யாரிடமும் அசிஸ்டெண்ட்டாக இருந்தது இல்லை.. எல்லாம் அவரு படம் பார்த்துதான்.. லோகேஷ் கனகராஜ்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சி திரையின் திருவிழா நிகழ்ச்சி சார்பில் ஃபேவரைட் இயக்குநர் விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், தான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது இல்லை என்றும் கமல் சார் படங்களை பார்த்து கற்றுக் கொண்டதுதான் என்றார்.
ஜீ தமிழ் டிவி திரையின் திருவிழா என்ற பெயரில் சினிமா நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை அண்மையில் நடத்தியது. விழாவின் முதல் பாகத்தை நேற்றைய தினம் ஒளிபரப்பியது ஜீ தமிழ் டிவி.
ஃபேவரைட் இயக்குநர் விருதை கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வழங்கியது. விருதை கமல் ஹாசன். கமல் கையால் விருதை வாங்கிய லோகேஷ் கனகராஜ் நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை.
கமல் சார் படங்களை பார்த்து என்னை வளர்த்துக் கொண்டேன் என்று பெருமையாக கூறினார். இதைக் கேட்ட கமல்ஹாசன் இதனால் எனக்கு பெருமிதம் தெரிவித்தார். அப்போது லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று கேட்டு கட்டிக்கொண்டார்.
