Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் முதல்முறையாக நடித்துள்ள படத்தின் போஸ்டர்.. தம்மு, தண்ணி என அலப்பறை பண்ணும் பிரபல நடிகை
குமரன் என்று சொல்வதை விட கதிர் என்று சொன்னால் மட்டுமே இவரை அடையாளம் தெரியும். அந்த அளவிற்கு விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பிரபலமானவர் கதிர்.
பல இளம் ஹீரோக்களை வளர்த்து விடுவதில் விஜய் டிவி முக்கியமான இடத்தில் உள்ளது. அந்த வகையில் தற்போது லாக்டவுன் என்ற முன்னோட்ட படத்தில்(Pilot Film) நடித்துள்ளார் குமரன். பில்லா இயக்கத்தில் குமரன் தங்கராஜ், சுனிதா நடிப்பில் இந்த முன்னோட்ட படம் விரைவில் திரையிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுனிதா தம் அடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

lockdown-first-look
இந்த இரண்டு போஸ்டர்களை பார்க்கும் போது லாக்டவுன் சமயத்தில் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் எப்படி அதிலிருந்து வெளி வருகிறார் என்பதை மையமாகக் கதைக்களம் இருக்கும்.
80% படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதத்தில் கண்டிப்பாக இந்த முன்னோட்ட படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பில்லா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்,சுனிதா எல்லாருமே தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள், இதனால் விஜய் ரசிகர்களும் இந்த படத்தை பார்ப்பதற்கு மிக ஆர்வமாக உள்ளனர்.

lockdown-second-look
