fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

LKG திரை விமர்சனம்.!

lkg movie review

Reviews | விமர்சனங்கள்

LKG திரை விமர்சனம்.!

LKG திரை விமர்சனம் | Lkg Movie Review

சினிமாவில் தற்பொழுது காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோவாக ஆசைப்படுவது வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் சந்தானத்திற்கு பிறகு நடிகர் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ளார்.

பாலாஜி ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எல்கேஜி இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது இந்த படத்தின் மூலம் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக வெற்றி பெற்றாரா என்று பார்க்கலாம்.

படத்தின் கதை

ஆர்ஜே பாலாஜி ஒரு வார்டு கவுன்சிலராக இருக்கிறார் இவர் அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் ஒவ்வொரு ஓட்டையும் சேகரிக்க ஓடி ஓடி பாடுபடுகிறார். இந்த நிலையில் தமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாத இருப்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.

அதனால் அரசியல்வாதிகளை புரமோட் செய்யும் பிரியா ஆனந்த் ஒரு கார்ப்பரேட்டில் வேலை செய்பவர் இவரின் உதவியுடன் பாலாஜி தனது அரசியல் பயணத்தை தொடங்கி இந்தியா முழுவதும் பிரபலமாகிறார்.

lkg movie review

lkg movie review

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் இறந்துவிடுகிறார் அதனால் இடைத்தேர்தல் வாய்ப்பு பாலாஜிக்கு கிடைக்கிறது அதேபோல் அதே கட்சியில் ஜே கே ரித்தீஷ் பாலாஜி எதிர்த்து போட்டி போடுகிறார் இதனை தொடர்ந்து அரசியல் என்ன ஆகிறது என்பதுதான் மீதி கதை.

படத்தில்

நடிகர் ஆர்ஜே பாலாஜி என்னதான் தான் ஹீரோவாக இருந்தாலும் தனக்கு எது வருமோ அதை மிகவும் அற்புதமாக செய்துள்ளார், சில இடங்களில் செண்டிமெண்ட் இருந்தாலும் அடுத்த செகண்டே தனது காமெடியால் கலக்கி விடுகிறார் ஆர் ஜே  பாலாஜி தனது பலமே காமெடி தான் என அவர் நன்கு அறிந்து கொண்டார் அதனால் காமெடியில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.

அதேபோல் மேலே சொன்னது போல் பிரியா ஆனந்த் கார்பெட்டில் வேலை செய்பவர் அமெரிக்காவில் ஒரு அரசியல்வாதியை எப்படி promote செய்து பிரபலமாக வைக்கிறார்களோ அந்த நிலைமை தற்பொழுது இந்தியாவுக்கும் வந்து விட்டது அந்த கம்பெனி நாங்கள்தான் என சொல்லிக்கொண்டு பாலாஜியை  புரமோட் செய்யும் விதம்,  ஒரு வீடியோ எப்படி உலகையே திரும்பி பார்க்க வைக்கிறது, என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.

என்னதான் முதலமைச்சராக இருந்தாலும்  கவுன்சிலர் மனது வைத்தால் தான் ரோடு போட முடியும் என்று காட்டிய விதம் அற்புதம்,  அதேபோல் கவுன்சிலரை மதிக்காத பள்ளிக்கூடத்தை கரண்ட் கட் செய்து தன்னிடம் மன்னிப்பு கேட்க வைக்கும் அரசியல் சூட்சமங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

அது மட்டுமில்லாமல் பேஸ்புக்ல லைவ் போகும்போது தளபதி 63 அப்டேட் கேட்பது மைக்கில் பேசும் போது அஜித் வாழ்க என கூறுவது என தற்பொழுது உள்ள இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என காட்டிய விதம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

படம் முழுக்க அரசியல் வைத்துதான் நகர்கிறது ஆனால் அனைத்து கட்சியையும் தாக்க வேண்டும் அல்லவா, ஆனால் இதில் ஒரு கட்சியை மட்டும் பலமாக தாக்கியுள்ளார், படத்தின் முதல் பாதி காமெடியாகவும் அரசியலாகவும் செல்கின்றது இரண்டாம் பாதி கொஞ்சம் சீரியஸாக போகிறது, ஆனால் அங்கேயும் ஒரு செம கலக்கல் இருக்கிறது.

சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் ஒளிப்பதிவு மிகவும் அற்புதமாக செய்துள்ளார்கள், பின்னணி இசையும் குறை கூறும் படி எதுவும் இல்லை ஆக மொத்தத்தில் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை ஏனென்றால் அரசியல் நிகழ்வுகளை அப்படியே நம் கண் முன்னே கொண்டுவந்து பார்ப்பவர்களை ரசிக்கவைதுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Reviews | விமர்சனங்கள்

அதிகம் படித்தவை

To Top