LKG படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.! இது தெரியுமா உங்களுக்கு

90களில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் இருந்தவர் ராமராஜன், அந்த காலகட்டத்தில் இவர் திரைப்படம் திரைக்கு வந்தால் மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் அதேபோல் ராமராஜன் திரைப்படம் திரையில் வருடக்கணக்கில் ஓடும்.

இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது, அதேபோல் ரசிகர்கள் ராமராஜனுக்கு மக்கள் நாயகன் என பெயர் சூட்டினார்கள், இந்த நிலையில் சமீபத்தில் அரசியலை கலாய்த்து வெளிவந்த திரைப்படம் எல் கே ஜி இந்த திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடித்திருந்தார்கள்.

அதேபோல் வில்லனாக ஆர்.கே.ரித்திஷ் நடித்திருந்தார், ஆனால் ஆர்கே ரித்திஷ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க நடிகர் ராமராஜனை அணுகினார்களாம், ஆனால் ராமராஜன் நடிப்பதில் விருப்பமில்லை என கூறி மறுத்து விட்டாராம்.

Leave a Comment