நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த டாப் 10 படங்களின் லிஸ்ட்.. இப்பவும் மறக்க முடியாத தளபதி தேவா, சூர்யா

சிவாஜி, எம்ஜிஆர் காலம் முதல் இப்போது வரை நட்பை இலக்கணமாக கொண்ட படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்திருக்கிறது. அதிலும் தமிழ் சினிமாவில் பிரண்ட்ஷிப்பை மையமாக வைத்து வெளியான படங்களின் டாப் 10 இடத்தைப் பிடித்த படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

இதில் சூர்யா-விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் 10-வது இடத்தையும், வினீத் அப்பாஸ் இணைந்து நடித்த காதல் தேசம் 9-வது இடத்தையும், இனிது இனிது 8-வது இடத்திலும், சென்னை 600028 திரைப்படம் 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மெட்ராஸ்: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் வெளிவந்த நட்ப ரீதியான திரைப்படம் ஆகும். இதில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளனர். நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் அமைந்துள்ளது. மெட்ராஸ் படம் சிறந்த பிரண்ட்ஷிப் திரைப்படங்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

பாய்ஸ்: 2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு என்ஜாய்புல்லான பிரண்ட்ஷிப் படமாக அமைந்துள்ளது. திரைப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் 62 கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஆகும். படத்தில் வரும் “அலெ அலெ” பாடல் காட்சியானது உலகிலேயே மிகப்பெரிய தோட்டமான பிரைடல் லாவண்டரில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாய்ஸ் திரைப்படம் பிரண்ட்ஷிப் திரைப்படங்களின் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளது.

Also Read: திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான 5 நடிகைகள்.. குழந்தை பெற்றுப்பின் கல்யாணம் பண்ணிய விஜய் பட நடிகை

குசேலன்: 2008 ஆம் ஆண்டு இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இதில் பசுபதி, மீனா, வடிவேலு, பிரபு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பசுபதி முடி திருத்தும் தொழிலாளியாக பாலு என்னும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். பசுபதிக்கும் ரஜினிக்கும் இடையே சிறுவயது நட்பு குறித்த திரைப்படம் முழுவதும் அமைந்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. குசேலன் படம் பிரண்ட்ஷிப் திரைப்படங்களின் வரிசையில் 4-வது இடத்தில் உள்ளது.

என்றென்றும் புன்னகை: 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அஹமத் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் ஆகும். இதில் ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீவாவின் காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.நட்பு ரீதியாக வெளியான இப்படம் விமர்சர்களின் பாராட்டைப் பெற்றதோடு இப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. என்றென்றும் புன்னகை படம் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படங்களின் வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: கமலஹாசனை காலை வாரிவிட்டு 5 தோல்வி படங்கள்.. தடமே தெரியாமல் தியேட்டரைவிட்டு தெறித்து ஓடிய மும்பை எக்ஸ்பிரஸ்

நண்பன்: 2012 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். இதில் விஜய் உடன் ஜீவா, ஸ்ரீகாந்த் இலியானா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

படத்தில் இவர்கள் மூவரும் அடிக்கும் லூட்டி படம் பார்ப்பவர்களையும் கடந்த காலத்திற்கு கூட்டி செல்லும் அளவிற்கு இருக்கும். ஆல் இஸ் வெல் என்னும் மந்திரத்தை கற்றுக் கொடுத்த படமாக அமைந்தது. ஆல் இஸ் வெல் என்பது எல்லாம் நல்லதுக்கே என்பதை குறிக்கும். நண்பன் படம் சிறந்த பிரண்ட்ஷிப் திரைப்படங்களின் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

தளபதி: 1991 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ஒரு அதிரடி திரைப்படம் ஆகும். இதில் ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி மற்றும் பானுப்பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாள நடிகரான தேவாவாக சூமம்முட்டி மற்றும் ர்யாவாக ரஜினிகாந்தின் நட்பானது படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.

சிறு வயதிலேயே தயாரால் அனாதையாக கைவிடப்பட்ட ரஜினிகாந்த் பின்னாளில் மம்பட்டியுடன் நண்பர் ஆகிறார்.இருவரின் நடிப்பும் இப்படத்தில் அல்டிமேட் ஆக இருக்கும்.படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதோடு “ராக்கம்மா கையத்தட்டு” என்ற பாடல் உலகில் சிறந்த பாடல்களின் பட்டியலில் ஒன்றாக உள்ளது. தளபதி படம் சிறந்த பிரண்ட்ஷிப் திரைப்படங்களின் வரிசையில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: 300 படங்களில் நடித்து எம்ஜிஆர், சிவாஜி ஆட்டிப்படைத்த வில்லி.. தூள் சொர்ணாக்காவையை மிஞ்சும் நடிப்பு

இவ்வாறு நட்பு ரீதியாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடக்கூடிய டாப் 10 சூப்பர் ஹிட் படங்களாகும். அதிலும் தளபதி படத்தில் தேவா மற்றும் சூர்யாவின் நட்பு படத்தை பார்ப்போரையே மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும்.

Next Story

- Advertisement -