Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளையராஜா முதல் இமான் வரை… சீரியலுக்கு இசையமைத்தவர்கள் இவர்கள்!

சீரியல்கள் ஹிட்டடிக்க வேண்டுமென்றால் முதலில் அதன் டைட்டில் பாடல்கள் ஹிட்டாக வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு சீரியலுமே 1,000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பப்படும். மீண்டும் மீண்டும் கேட்கும் அளவிற்கு ரசிகர்களை அப்பாடல்கள் ஈர்க்கவேண்டியது அவசியம். அப்படி நமக்குப் பிடித்த சில சீரியல் பாடல்களின் மியூசிக் டைரக்டர் யாருன்னு சின்ன லிஸ்ட்.

டி. இமான்:
சின்னத்திரைதான் இமானுக்கான திரையுலக நுழைவுச் சீட்டு. 2000த்தில் வெளியாகி செம ஹிட்டான‘கிருஷ்ணதாசி’ தொடருக்கான டைட்டில் பாடல்தான் இமானை சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்தியது. ஜெமினி கணேசன், ரஞ்சிதா, நளினி நடித்த ‘கிருஷ்ணதாசி’ செம ஹிட். அதைத்தொடர்ந்து, இதுவரை 14க்கும் மேற்பட்ட சீரியல்களுக்கு டைட்டில் பாடல் இசையமைத்திருக்கிறார் இமான். குறிப்பாக தேவயாணியின் ‘கோலங்கள்’, அபிதா நடித்த ‘திருமதி செல்வம்’ தொடர்களின் பாடல்கள் வேறலெவல். சினிமாவில் இசையமைக்க தொடங்கிவிட்டாலும் நடுநடுவே, ‘உறவுகள்’, ‘செல்லமே’, ‘பந்தம்’, ‘வசந்தம்’, ‘சிவசக்தி’ என்று சீரியல்கள் இசையமைப்பதையும் விடவில்லை. தற்பொழுது இமான் படங்களில் செம பிஸி.

தினா:

‘கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா…’ என்று அனைவரின் கவனம் ஈர்த்த சீரியல் பாடல் ‘சித்தி’. இல்லத்தரசிகளுக்கு பூஸ்ட் கொடுத்த இந்தப் பாடலின் இசையமைப்பாளர் தினா. 50 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த, கவனிக்கத்தகுந்த இசையமைப்பாளர். ‘சின்னப்பாப்பா பெரியபாப்பா’, ‘திக் திக் திக்’, ‘நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்’, ‘மெட்டி ஒலி’, ‘அண்ணாமலை’, ‘அலைகள்’, ஏவிஎம் புரொடக்‌ஷனில் வெளியான ‘வாழ்க்கை’, ‘நம்பிக்கை’ என்று இவரது இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. ராதிகாவின் நிறுவனத்திற்கும் ஏவிஎம் நிறுவனத்திற்கும் ஆஸ்தான இசையமைப்பாளர் தினா. இவற்றைத் தவிர்த்து, தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் டைட்டில் சாங் தவிர்த்து ‘நந்தினி’ சீரியலுக்கும் இசையமைத்துள்ளார்.

X.பால்ராஜ்:

தினா போலவே சீரியலில் 2005களில் ஜொலித்த மற்றொரு இசையமைப்பாளர் பால்ராஜ். சினிமாவில் பிரவேசிக்காவிட்டாலும் சின்னத்திரையில் எமோஷனல் காட்சிகளில் பின்னணி இசையால் அழவைக்கும் இவரது இசை கோர்ப்புகள் ஆஸம். ‘மைடியர் பூதம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘சந்திரலேகா’, ‘ வேப்பிலைக்காரி’ என்று பல சீரியல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி:
இளசுகளின் மனதினைத் திருடும் ட்ரெண்டிங்கான பாடல்களை சினிமாவில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தந்தவர் விஜய் ஆண்டனி. “கனவுகள்காணும் வயசாச்சி இளமைக்கு முகவரி கிடைச்சாச்சி…” என்று ‘கனா காணும் காலங்கள்’ சீரியலிலும், “என்னைத்தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு, உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்…” என்று ‘காதலிக்க நேரமில்லை’ சீரியலிலும், காதல் அனுபவத்தை இசையால் தந்தவர். இவ்விரு பாடல்களும் இன்றுவரையிலும் பலரின் ஃபேவரைட் ரிங்டோன். இந்த பாடல்களுக்காகவே இரு தொடர்களும் விஜய் டிவியில் தற்பொழுது மறுஒளிபரப்பாகிவருகிறது. தவிர, ‘சின்னப்பாப்பா பெரியபாப்பா’ சீரியலின் மூன்றாவது சீசனின் தீம் மியூஸிக்கும் இவர்தான். இசையமைப்பிலிருந்து நடிப்பு பக்கம் விஜய் ஆண்டனி தாவி விட்டதால், சீரியல்களின் பக்கம் இனி இவர் வருவது சாத்தியமில்லை.

ஹிப்ஹாப் ஆதி:

லேட்டஸ்டாக சுந்தர்.சி கதை எழுதி, தயாரித்துவரும் சீரியல் நந்தினி. நாகினிக்குப் பதிலாக சன் டிவியில் தொடங்கப்பட்ட நந்தினி செம ஹிட். சுந்தர்.சிக்காகவே, இந்த சீரியலுக்கான டைட்டில் பாடலை இசையமைத்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. ஆல்பம், பட இசைமைப்பைத் தாண்டி சீரியலுக்கு புதுவரவாக வந்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி இன்னும் பல ட்ரெண்டியான பாடல்களை இசையமைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இளையராஜா:

சினிமாவில் வெற்றிகண்ட பல இயக்குநர்கள் சீரியலிலும் எண்ட்ரி கொடுத்தார்கள். பாலசந்தரைப் போல பாரதிராஜாவும் சீரியல்கள் இயக்க தொடங்கினார். இவரின் இயக்கத்தில் 2008ல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் “தெக்கத்திப்பொண்ணு’. ஸ்வர்ணமால்யா, சந்திரசேகர், நெப்போலியன் என்று தெக்கத்திய மண்வாசனையுடன் வெளியான பாரதிராஜாவின் நெடுந்தொடர். இந்த சீரியலுக்கான டைட்டில் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா. தவிர, 1991ல் வெளியான ‘பெண்’, 2008ல் வெளியான ‘நம்ம குடும்பம்’ சீரியல்களுக்கும் டைட்டில் பாடல் இசையமைத்திருக்கிறார் இசைஞானி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top