Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருநங்கையாக கலக்கிய நடிகர்கள்.. எந்த நடிகர் மாஸ் பண்ணினார்?
சினிமாவில் ஆயிரம் கதாபாத்திரங்கள் இருந்தாலும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த நடிகர்களுக்கு தனிப்பெருமை உண்டு. அதிலும் திருநங்கைகளை கொச்சைபடுத்தாமல் அவர்களுடைய வாழ்க்கை முறைகளை அப்படியே பிரதிபலித்த நடிகர்கள் யார் யார் என்பதை காணலாம்.
சரத்குமார் காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து அனைவரின் ஆதரவையும் ஒருங்கே பெற்றவர். மிகப்பெரிய நடிகர் இப்படியொரு கேரக்டரில் நடிப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த கேரக்டர் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ்ராஜ் அப்பு திரைப்படத்தில் பிரசாந்துக்கு வில்லனாக திருநங்கை வேடத்தில் சூப்பராக நடித்திருப்பார். அவரின் இந்த கதாபாத்திரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஜெயம்ரவி ஆதி பகவன் என்ற படத்தில் திருநங்கை வேடத்தில் வில்லனாக நடித்திருப்பார். அழகான திருநங்கையாக படம் முழுவதும் மிரட்டி இருப்பார். ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரங்களில் திருநங்கை வேடம் மிகவும் அவரை பாதித்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் கதாபாத்திரத்தின் கதாநாயகன் என தனி பெயரே இவருக்குண்டு. அந்த அளவுக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். இருமுகன் படத்தில் திருநங்கை வேடத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.
அதேபோல் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்திலும் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திலும் திருநங்கைகளாக நடித்திருப்பார்கள். இதில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் உலக அளவில் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கதிர் சிகை என்ற படத்தில் திருநங்கையாக நடித்து பெயர் பெற்றார். அதேபோல் அங்காடி தெரு புகழ் மகேஷ் தேனாம்பேட்டை எனும் படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார்.
நடிகர் விவேக் திருநங்கை வேடம் அணிந்து காமெடியாக நடித்த படம் முரட்டுக்காளை. இதில் அவருக்கு பெரிய பெயர் கிடைக்கவில்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம்.
