நம் ரஞ்சி போட்டிகளை பொறுத்தவரை, தன ஸ்டேட் டீமுக்கு மட்டுமே ஒரு வீரர் ஆட முடியும். ஏதேனும் காரணமாக ஸ்டேட் மாற விரும்பும் பட்சத்தில் தன் சொந்த ஸ்டேட் டீமிடம் நோ – அபஜக்ஸன் வாங்கும் பட்சத்தில் அணி மாற முடியும்.

ஐபில் போட்டிகளை பொறுத்தவரை அணியை முடிவு செய்யும் உரிமை வீரர்களுக்கு கிடையாது தான். ஏலத்தின் அடிப்படையில் தான் வீரர்களை எடுக்கிறார்கள். எனினும் குறிப்பிட்ட வீரர்களை பார்ம் அடிப்படையில் தக்கவைப்பது, மேட்ச் கார்ட் பயன் படுத்துவது என்று பல ராஜா தந்திரங்கள் உள்ளது.

சில ஸ்டாட்டிஸ்டிக் தொகுப்பை பார்ப்போம்.

11 சீசனிலும் ஒரே டீம் !

விராட் கோலி
kohli

11 வருடமாக ஒரே ஐபில் டீமில் ஆடும் வீரர் விராட் மட்டும் தான். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. முதலில் வீரராக பின்னர் கேப்டனாக ஆடி உள்ளார்.

அதிக டீம்களில் அடியவர்கள் !

6 டீம்களுக்கு மேல் விளையாடியவர்கள் பற்றி பார்ப்போம்

ஆரோன் பின்ச்

Aaron Finch

ஆஸ்திரேலியாவின் பின்ச் இதுவரை டெல்லி, குஜராத், மும்பை, ஹைதெராபாத், ராஜஸ்தான் மற்றும் புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். விரைவில் தன் ஏழாவது டீம்மான பஞ்சாப் சார்பில் இந்த சீசன் களம் இறங்கவுள்ளார்.

பார்திவ் படேல்
parthiv patel

சி எஸ் கே, டெக்கான் சார்ஜெர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ், மும்பை, ஆர் சி பி , சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். இம்முறை மீண்டும் ஆர் சி பி அணியில் ஆட உள்ளார்.

திசாரா பெரேரா

Thisira Perera

சி எஸ் கே, கொச்சி டஸ்கர்ஸ் , மும்பை, சன்ரைசர்ஸ் , கிங்ஸ் பஞ்சாப், புனே சூப்பர் ஜியான்ட் என 6 அணிகளுக்காக ஆடியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்
DK – KKR

நம் கொல்கத்தா கேப்டன் இதற்கு முன் டெல்லி, மும்பை, பெங்களூரு, கிங்ஸ் பஞ்சாப், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு ஆடியுள்ளார். கொல்கத்தா அணி இவரின் ஆறாவது டீம்.

150 ஐபில் போட்டிகளுக்கு மேல் ஆடியவர்கள்

சுரேஷ் ரெய்னா 163 ; தோணி 161 , ரோஹித் சர்மா 160 ; தினேஷ் கார்த்திக் 154 , ராபின் உத்தப்பா 151 ; கம்பிர் , கோலி , யூசுப் பதன் 150 போட்டிகள்.