சீனா, இந்தியாவை அடுத்து அதிக மக்கள் தொகை கொண்டது ஃபேஸ்புக் தான். சமூக வலைத்தளங்களின் அரசன் என்று கொண்டாடப்பட்டு வரும் ஃபேஸ்புக், வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

ஃபேஸ்புக்கில் இதெல்லம் புதுசு! உங்களுக்கு தெரியுமா?

இந்த நிலையில் சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிவிப்பு செய்துள்ள வசதிகள் என்னென்ன என்று தற்போது பார்ப்போம்

புதிய ஆப்-கேமிரா:

ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் புதிய எபெஃக்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப் கேமிரா என்று கூறப்படும் இந்த வசதியின் மூலம் புகைபப்டங்களுக்கு மாஸ்க், பிரேம் உள்பட பலவற்றை செய்து அழகூட்டலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஃபேஸ்புக் மொபைல் ஆப்-இல் இடது ஓரத்தில் உள்ள கேமிரா ஐகானை ஒரு தட்டு தட்டினால் போதும். உடனே உங்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அழகூட்டும் ஆப்சன்கள் உங்கள் கண் முன் தோன்றும்
ஃபேஸ்புக் மெசெஞ்சர் மூலம் வெளிப்படுத்தும் உணர்வுகள்:ஃபேஸ்புக் மெசெஞ்சர் மூலம் வெளிப்படுத்தும் உணர்வுகள்: ஃபேஸ்புக் மெசெஞ்சர் என்பது நமது நண்பர் அல்லது குழுவுடன் சேட் செய்ய உதவும் ஒரு ஆப் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மெசெஞ்சரில் இதுவரை டெக்ஸ்ட் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் குறிப்பாக மகிழ்ச்சி, காதல், கோபம், வருத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆப்சன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்றவர்களின் உணர்வுகளை வலது ஓரத்தில் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியை நீங்கள் உங்களுக்கு வரும் நோட்டிபிகேசனிலும் பெற்று கொள்ளலாம்
“மாங்கு மாங்குனு” வேலை செய்தால் மட்டும் சம்பாதித்து விட முடியாது.!

டுவிட்டரில் இருக்கும் வசதி இனி ஃபேஸ்புக்கிலும்

டுவிட்டரில் இருக்கும் வசதி இனி ஃபேஸ்புக்கிலும்

டுவிட்டரில் நாம் தெரிவிக்க விரும்பும் ஒரு கருத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் @ போட்டு அவருடைய டுவிட்டர் அக்கவுண்டை பதிவு செய்தால் நம்முடைய கருத்து சம்பந்தப்பட்டவருக்கு சென்றுவிடுவதோடு, அதை நோட்டிபிகேசனிலும் காண்பிக்கும். இந்த வசதி தற்போது ஃபேஸ்புக்கிலும் வந்துவிட்டது. இதனையும் பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம்இருக்கும் இடத்தை அறியும் வாய்ப்பு:

இருக்கும் இடத்தை அறியும் வாய்ப்பு:

கூகுளில் இருப்பதை போலவே ஃபேஸ்புக்கிலும் லைவ் லொகேசனை அறியும் வசதி ஃபேஸ்புக்கில் வந்துவிட்டது. இந்த வசதியால் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எங்கே இருக்கின்றார்கள் என்பதை மிக எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சரில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு மட்டுமான சிறப்பு வசதி:

இந்தியாவுக்கு மட்டுமான சிறப்பு வசதி:

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் இந்தியாவுக்கு என பிரத்யேகமாக ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ‘ஏ பிளேஸ் டு கனெக்ட்’ என்ற இந்த வசதியில் கேமிராவில் புதிய எபெக்ட்கள் கிடைக்கும். அதில் நமஸ்தே, டெல்லி, மும்பை, கோவா போன்ற இடங்களின் புகைப்படங்கள் ஆகியவை கிடைக்கும்.