ஒரு நல்ல விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்கிவிட்டு அதில் தேவையான ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. தற்போது கோடிக்கணக்கில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆப்ஸ்கள் கொட்டி கிடக்கின்றன

ஆனால் அதே நேரத்தில் ஒருசில ஆப்ஸ்கள் நம் இண்டர்நெட் டேட்டாவை அதிகம் காலி செய்து நம் பர்சுக்கு உலை வைக்கும். கடந்த சில வருடங்களாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இண்டர்நெட் டேட்டாவுக்கான கட்டணத்தை உயர்த்தி கொண்டே செல்கின்றன.

அந்த வகையில் நாம் எல்லோரும் ரிலையன்ஸ் ஜியோவுக்குத்தான் நன்றி கூற வேண்டும். சுமார் ஆறு மாத கால இலவச டேட்டா கொடுத்ததோடு தற்போது மிகக்குறைந்த கட்டணத்தில் அன்லிமிட் டேட்டாக்களை வழங்கி வருகின்றன. இருப்பினும் நான் இண்டர்நெட்டை குறைவாக பயன்படுத்த வழிகள் உள்ளன.

குறிப்பாக நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் அவர்களாக குறைவான டேட்டா பயன்படுத்தி லைட் ஆப்ஸ்களை கொண்டு வந்துள்ளன. இந்த லைட் ஆப்ஸ்கள் நம்முடைய இண்டர்நெட் டேட்டாவின் செலவை வெகுவாக குறைக்கின்றன. இவ்வாறு லைட் வெர்ஷன் உள்ள சில ஆப்ஸ்களை தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஃபேஸ்புக் லைட்:

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களின் நன்மையை கருது குறைவான டேட்டாவில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக் லைட். இந்த லைட் வெர்ஷனில் இமேஜ்கள் பார்க்க குறைந்த டேட்டா இருந்தால் போதும்.

அதிகம் படித்தவை:  நிர்வாண நடிகையுடன் சாமியார் செய்த யோகா!

மேலும் GIF இமேஜ்கள் இதில் தெரியாது. மேலும் இந்த லைட் வெர்ஷனில் வீடியோவையும் பார்க்க முடியாது என்பதால் நம்முடைய டேட்டா மிகப்பெரிய அளவில் மிச்சமாகும். மேலும் இந்த லைட் வெர்ஷன் மெதுவான இண்டர்நெட் கனெக்ஷன் இருந்தாலும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மெசஞ்சர் லைட்:

ஃபேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்குமே மெசஞ்சர் என்ற ஒன்று இருப்பது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த மெசஞ்சர் செயலிக்கும் மிகக்குறைந்த அளவு டேட்டா இருந்தால் போதும்.

மேலும் இந்த மெசஞ்சர் செயலி, மெயின் ஃபேஸ்புக்கில் இருப்பது போன்றே இமேஜ்களை அட்டாச் செய்ய முடியும். மேலும் ஒருசில லிமிட்டான ஸ்டிக்கர்களையும் இதில் பயன்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில் இந்த மெஞ்சரின் மூலம் ஆடியோ அல்லது வீடியோ கால் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  நாச்சியார் படத்தில் ஜி வி பிரகாஷ் ரோலில் நடிக்க இருந்த முதல் சாய்ஸ் நடிகர் யார் தெரியுமா ?

 

டுவிட்டர் லைட்:

ஃபேஸ்புக்கை அடுத்து உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கும் டுவிட்டர் சமூக வலைத்தளமும் லைட் வெர்ஷனை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் திருப்தியை பெற்றுள்ளது. டுவிட்டரால் அதிக டேட்டா செலவு செய்பவர்கள், டேட்டா செலவை கட்டுப்படுத்த இந்த லைட் வெர்ஷனை பயன்படுத்தலாம்.

இந்த வெர்ஷனில் இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியாது. டுவீட் டெக்ஸ்ட்களை மற்றும் பார்த்து கொள்ளலாம். மொபைல் பிரெளசர் சென்று அதில் mobil.twitter.com சென்றால் இதனை பயன்படுத்தலாம்.

 

ஸ்கைப் லைட்:

வீடியோ கால் வசதியுள்ள ஸ்கைப் சமூக வலைத்தளமும் மிக அதிக அளவில் டேட்டாக்கள் கரைய காரணமான ஒரு ஆப்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் இதன் லைட் வெர்ஷனை பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவில் டேட்டாவை சேமிக்க முடியும். வீடியோ மற்றும் ஆடியோவை கம்ப்ரஸ் செய்து நமது டேட்டாவை மிச்சப்படுத்தி கொடுக்கின்றது இந்த லைட் வெர்ஷன்.