Tamil Nadu | தமிழ் நாடு
ஒரே ஆண்டில் இத்தனை நாட்கள் விடுமுறையா.? 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த லிஸ்ட்!
ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு முன்பே அதில் எத்தனை விடுமுறை நாட்கள் உள்ளன என்பதற்கான கணக்கெடுப்புகள் தொடங்கி விடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக அரசு அலுவலர்கள், பள்ளியில் பணிபுரிபவர்கள், மாணவ மாணவிகள் இதில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பர்.
அந்தவகையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட கிழமை நீதிமன்றம் ஆகியவற்றிற்கு வருகின்ற 2021 ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி குமரப்பன் அறிவிப்பாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த ஆணையில் வரும் 2021 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசால் வெளியிடப்பட்டுள்ள பொது விடுமுறை நாட்களின் லிஸ்ட் இதோ:
- ஜனவரி 1- ஆங்கில புத்தாண்டு
- ஜனவரி 12,13,14,15- பொங்கல் விடுமுறை
- ஜனவரி 26- குடியரசு தின விழா விடுமுறை
- ஏப்ரல் 2- புனித வெள்ளி
- ஏப்ரல் 13- தெலுங்கு புத்தாண்டு
- ஏப்ரல் 14- தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள்
- மே 14- ரம்ஜான் பண்டிகை
- ஜூலை 21- பக்ரீத் பண்டிகை
- ஆகஸ்ட் 20- மொகரம்
- ஆகஸ்ட் 30- கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 10- விநாயகர் சதுர்த்தி
- அக்டோபர் 14, 15- ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி
- அக்டோபர் 19- மிலாடி நபி
- நவம்பர் 3,4, 5- தீபாவளி பண்டிகை விடுமுறை
- மே 12 முதல் 30 வரை- கோடை விடுமுறை
- அக்டோபர் 9 முதல் 18 வரை- தசரா பண்டிகை விடுமுறை
- டிசம்பர் 25 முதல் 30 வரை- கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை

2021
இது மட்டுமில்லாமல் ஜனவரி 23, மார்ச், ஏப்ரல் 17, ஜூன் 5, ஜூலை 3, ஆகஸ்ட் 7, செப்டம்பர் 4, அக்டோபர் 23, நவம்பர் 20, டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் கிழமை நீதிமன்றங்கள் செயல்படும் என்றும் அந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
