2024ல் அதிக வரி கட்டியவர்களின் பட்டியல்.. விஜய் கட்டிய தொகை எவ்வளவு தெரியுமா.?

Vijay : ஒவ்வொரு வருடமும் அதிகம் வருமான வரி செலுத்தியவர்களின் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் 2024 இல் அதிக வருமான வரி கட்டியவர்களின் பட்டியலை பார்ச்சூன் இந்தியா இதழ் வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக சினிமா துறையில் பிரபலங்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.

அதில் யார் அதிக வரி செலுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் 14 கோடி வரி செலுத்தி இருக்கிறார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மோகன்லால் நடிப்பில் வெளியாகிறது.

மேலும் கிரிக்கெட் வீரர் தோனி ஆண்டுக்கு 38 கோடி வருமானம் செலுத்துகிறார். சச்சின் டெண்டுல்கர் 26 கோடி வரி செலுத்தியுள்ளார். கிரிக்கெட் வீரர்களில் அதிக வரி செலுத்தும் பிரபலமாக விராட் கோலி இருக்கிறார்.

2024இல் அதிக வரி கட்டியவர்களின் பட்டியல்

இவர் சுமார் 66 கோடி வரி செலுத்தி இருக்கிறார். கிரிக்கெட் மட்டுமன்றி விளம்பரங்களிலும் விராட் கோலி சம்பாதித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 71 கோடி வரி செலுத்தி நான்காவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் சல்மான் கான் இருக்கிறார்.

அதாவது வருடத்திற்கு 75 கோடி வரியை சல்மான் கான் செலுத்திய உள்ளார். மேலும் இரண்டாவது இடத்தில் தளபதி விஜய் உள்ளார். விஜய் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்தாலும் ஒரு படத்திற்கு அவரது சம்பளம் 200 கோடியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் கிட்டத்தட்ட 80 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 92 கோடி வரி செலுத்தி இருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கொடிகட்டி பறந்து வரும் ஷாருக்கான் வருமான வரி செலுத்தியவர்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

மாஸ் காட்டும் விஜய்

Next Story

- Advertisement -