Tamil Cinema News | சினிமா செய்திகள்
OTT- இல் வெளியாகவுள்ள வேற லெவல் படங்களின் லிஸ்ட் இதோ.. தீபாவளிக்கு செம ட்ரீட் ரெடி!
தமிழ் சினிமாவில் தீபாவளி சீசன் என்றாலே திரையரங்குகளுக்கும் ரசிகர்களுக்கும் பெரிதும் கொண்டாட்டம் தான். ஏனெனில் இந்த காலகட்டத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ரிலீசாகி பாக்ஸ் ஆபீசை நிறைப்பது வழக்கம்.
அந்த வகையில் தீபாவளி சீசன்களில் தான் விஜய் படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிட்டு தியேட்டர் ஓனர்களை குஷிப்படுத்தும். ஆனால் இந்த தீபாவளிக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படம் வெளியாக போவதில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக OTT தளங்களில் பல தமிழ் படங்கள் மற்றும் வெப் சீரியல்கள் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்த போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் OTTயில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்களும், வெளியீட்டு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
OTT தளங்களில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ:
சூரரைப்போற்று: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் தான் ‘சூரரைப் போற்று’. இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தியாவில் குறைந்த விமான சேவை கட்டணத்தை தொடங்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மூக்குத்தி அம்மன்: தமிழ் சினிமாவில் ‘எல்கேஜி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் தான் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். நகைச்சுவையை பின்னணியாகக் கொண்ட இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்- இல் வெளியாக உள்ளதாம்.

mookuthi-amman
மிஸ் இந்தியா: கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள ‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தை நரேந்திரநாத் இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி இருக்கும் இந்தப் படம் நவம்பர் 17ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாம்.
அந்தகாரம்: விக்னராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை அட்லி தயாரித்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

anthakaram-arjundas
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு: ராஜா ராஜ மூர்த்தி இயக்கியுள்ள ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் தேதி மற்றும் தளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இந்தப்படம் நவம்பர் மாதம் வெளியாவதாக சொல்லப்படுகிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-இல் வெளியாகவுள்ள தமிழ் தொடர்களின் லிஸ்ட் இதோ:
- நவம்பர் ஸ்டோரி- தமன்னா
- மை பர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்- சத்யராஜ்
- லவ் டெலிகாஸ்ட்- வைபவ், காஜல் அகர்வால்
- ட்ரிபிள்ஸ்- ஜெய், வாணி போஜன்
எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு OTT தளங்களில் ரிலீஸாகவுள்ள படங்களை, புது அனுபவத்தில் பார்க்க மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
