Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழகம் முழுவதும் இன்று தியேட்டர்களில் திரையிடப்பட்ட படங்களின் லிஸ்ட்.. உச்சக்கட்ட சந்தோசத்தில் ஓனர்கள்!
கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் கொரோனா வைரஸ் காரணமாக திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் OTT தளத்தில் வெளியாகி, தியேட்டர் உரிமையாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தமிழக அரசின் அனுமதியுடன் நாளை திறக்கவிருக்கும் தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களின் லிஸ்ட் வெளியாகி, ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையரங்கு ஓனர்களையும் குஷிப்படுத்தி உள்ளது.
அதாவது OTT தளங்களுக்கு போட்டியாக வந்ததால், அதிர்ச்சியடைந்த தியேட்டர் ஓனர்கள், தமிழக முதல்வருக்கு திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதன் விளைவாக கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி 50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்களை நவம்பர் பத்தாம் தேதி முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் நாளை முதல் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறிருக்க, தற்போது தியேட்டர்கள் நாளை திறக்கும்போது திரையிடப்பட உள்ள படங்களின் லிஸ்ட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே வெளியான முன்னணி நடிகர்களின் பழைய படங்களையும், கொரோனாவின் போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த படங்களையும் மீண்டும் திரையிட தியேட்டர் ஓனர்கள் முடிவு செய்துள்ளனராம்.
அந்தவகையில் பாண்டிச்சேரியில் ‘பிகில்’ படம் மீண்டும் திரையிடப்பட உள்ளதாம்.
சென்னையில் முன்னணி தியேட்டர்களான பிவிஆர் மற்றும் சத்யம் சினிமாஸில் திரையிடப்பட உள்ள படங்களின் லிஸ்ட் இதோ:
- ஜோக்கர்
- தாராள பிரபு
- ஓ மை கடவுளே
- பீஷ்மா
- Hit
- 1917
- My Spy
இவ்வாறு ஏற்கனவே திரையிட்ட படங்கள் தியேட்டர்களில் மறுஒளிபரப்பு செய்யப்படுவதால் அந்தந்த படத்தின் இயக்குனர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
அந்த வகையில் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் படம் வெளியாகியாகும் தியேட்டர்களின் விவரங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

theatres-cinemapettai
