புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சூர்யா கமிட்டாகி ட்ராப் ஆன படங்களின் லிஸ்ட்.. பக்குனு இருக்கே.. 10 வருஷமா ஹிட் கொடுக்காதது இதுனால தானா!

சினிமாவில் சக நடிகர்களுடனான போட்டிகளைச் சமாளிப்பதுடன், ஹிட் படங்கள் கொடுக்க வேண்டும் என்ற இலக்கு ஒவ்வொரு முன்னணி நடிகருக்குமே இருக்கும். அதேபோல், சினிமாவில் நேருக்கு நேரில் அறிமுகமானாலும், காக்க காக்க படத்தில் தன்னை நிலை நிறுத்தி, சில்லுனு ஒரு காதலில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து, சிங்கமாக கம்பீரம் காட்டி, அயன் படத்தில் ஆக்சன் அவதாரம் காட்டியவர் சூர்யா.

இவருக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஜெய்பீம், சூரரைப் போற்று ஆகியவை நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி வெற்றி பெற்றதைத் தவிர, தியேட்டரில் வெளியான அஞ்சான், எதற்கும் துணிந்தவன் ஆகியவை கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது.

இதனால் சூர்யாவின் அடுத்த வெற்றிப் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி, சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா பிரமாண்ட படமாக இருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று ரூ.90 கோடிக்கு மேல்தான் வசூலித்துள்ளது.

இதற்கிடையில் சூர்யா கமிட்டாகி கைவிட்ட படங்கள் பற்றி பார்க்கலாம். கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த படம் துருவ நட்சத்திரம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அவருக்குப் பதிலாக விக்ரம் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் துப்பறியும் ஆனந்தன் படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று இப்படம் டிராப் ஆனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த படம் இரும்புக் கை மாயாவி. இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ட்ராப் ஆனது. இன்னும் சில ஆண்டுகளில் இப்படம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சூரரைப் போற்று படத்துக்குப் பின் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த படம் புறநானூறு. பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் திடீரென்று டிராப் ஆனது. இப்படத்தில் சூர்யாவுக்குப் பதில் சிவகார்த்திகேயன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த படம் அருவா. வேல், சிங்கம், ஆறு, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களைத் தொடர்ந்து இருவரும் இணைந்து 6 வது கூட்டணி அமைக்க இருந்த படத்தில் எதோ சில காரணங்களால் டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்து ஹிட் படங்களையும் கொடுத்த இயக்குனர்களுடன் ஏன் திரும்ப கூட்டணி அமைக்க சூர்யா தயங்கினார். அதுதான் கடந்த 10 ஆண்டுகளில் அவர் சரியான படங்களைத் தேர்வு செய்யாமல் வெற்றியை கோட்டை விட்டதற்கான காரணமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News