Tamil Nadu | தமிழ் நாடு
நிவர் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட சேதங்களின் பட்டியல்.. வீழ்ந்துபோன தமிழகத்தை மீட்டெடுக்க போராடும் முதல்வர்!
தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறார்.
தற்போது தமிழகத்தின் பெரும் சவாலாக இருந்த நிவர் புயல் தன்னுடைய கோரத்தாண்டவத்தை முடித்து இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
ஏற்கனவே முதல்வர் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை எடுத்து தமிழ் மக்களைக் காப்பதற்கு அதி துரிதமாக செயல் பட்டதோடு, அதனால் ஏற்பட்ட சேதங்களையும் மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் நிவர் புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய சேதங்களின் பட்டியல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நிவர் புயலால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதோ:
- மனித உயிரிழப்பு- 3
- காயமடைந்தவர்களின் எண்ணிக்கை- 3
- சேதமடைந்த வீடுகள்- 101
- கால்நடைகள் உயிரிழப்பு- 26
- சாலைகளில் சேதமடைந்த மரங்களின் எண்ணிக்கை- 380
- அரசால் அகற்றப்பட்ட மரங்களின் எண்ணிக்கை- 380
- மீட்பு முகாம்களின் எண்ணிக்கை- 3085
- முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை- 2,27,317
- வீழ்ந்த மின்கம்பங்கள்- 19
- சீரமைக்கப்பட்ட மின்கம்பங்கள்-19
- நிரந்தர மருத்துவ முகாம்கள்- 921
- நடமாடும் மருத்துவக் குழுக்கள்- 234
- மருத்துவ பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை- 73,491
- பயிர் சேதம்- வாழை மரங்கள் 14 ஏக்கர்
மேலும் சிறப்பாக செயல்பட்டு சென்னையை பழைய நிலைக்கு மாற்றிய சென்னை மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் சோசியல் மீடியாக்களில் பலர் தங்களது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, பேரிடர் காலத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சேதத்தை குறைத்ததோடு, சேதமடைந்த மரங்களையும், மின்கம்பங்களையும் உடனடியாக சீரமைத்து தந்த முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் தமிழக மக்கள்.
