கோலிவுட்டில் எப்போதும் எதிரும் புதிருமாக இருக்கும் நடிகர்களின் லிஸ்ட்.. ஒருத்தருக்கு ஒருத்தர் சுத்தமா ஆகாதாம்

தமிழ் சினிமாவில் என்னதான் நடிகர்களை வைத்து ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டாலும், சில நடிகர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. தற்போது கோலிவுட்டில் முட்டிக்கொள்ளும் நடிகர்களின் லிஸ்ட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர்- ரவிச்சந்திரன், ஜெய்சங்கர்: முதலாவதாக மூத்த நடிகரான எம்ஜிஆர் அவர்களுக்கு, நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை பிடிக்காதாம். ஏனென்றால், ஜெயலலிதாவுடன் நடிக்கும்போது இரண்டு பேரும் அதிக நெருக்கம் காட்டியது தான் என்று சொல்லப்படுகிறது.

சத்தியராஜ்- ரஜினி: அடுத்ததாக சத்யராஜுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்காதாம். இதற்குக் காரணம் ரஜினி ஒரு கன்னடர் என்பதாம்.

rajini-sathyaraj-cinemapettai
rajini-sathyaraj-cinemapettai

சிம்பு- விஷால்: மேலும் சிம்புவிற்கு நடிகர் விஷால் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாதது போல் தெரிகிறது. இதற்கு முழு காரணம் நடிகர் சங்க சண்டை தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

ஆர். சுந்தர்ராஜன்- ரஜினி: ஆர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு ரஜினியை பிடிக்காதம். இதனால் ரஜினியை தரக்குறைவாக விமர்சித்ததோடு, அவர் மீதுள்ள வெறுப்பை வெளிப்படையாகவே காட்டியுள்ளார். அதேபோல், இவர் அரசியலுக்கு வர நினைத்து வீட்டில் இருந்து கிளம்பி வருவதற்குள் இறந்து விடுவார். அவர் பாடி கண்டிஷன் அப்படி என்று ரஜினி ரசிகர்கள் சுந்தர்ராஜன் உயிருடன் இருக்கும்போதே அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். இதனால் சுந்தரராஜனுக்கு ரஜினி மீது இருந்த வெறுப்பு அதிகமானதாம்.

சந்தானம்- சிவகார்த்திகேயன்: அடுத்ததாக நடிகர் சந்தானத்திற்கு சிவகார்த்திகேயனை பிடிக்காதாம். இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் சந்தானத்திற்கு பிறகு விஜய் டிவியிலிருந்து வந்து சினிமா துறையில் மாபெரும் வெற்றி பெற்று பொறாமை தானாம்.

santhanam sivakarthikeyan
santhanam sivakarthikeyan

இதைத் தவிர சிவகார்த்திகேயனை மறைமுகமாக அருண்விஜய் ‘யாரெல்லாம் மாஸ் படம் பண்றது என்ற ஒரு விவஸ்தையே இல்ல’ என்று கூறியிருப்பார். அதற்குப் பின்னர் தனது சமூக வலைத்தளத்தில் தவறுதலாக அட்மின் பதிவிட்டு விட்டார் என்று தெரிவித்திருந்தார் அருண் விஜய்.

தனுஷ்- வடிவேலு: தனுஷ் மற்றும் வடிவேலு இருவருக்கும் படிக்காதவன் படத்தில் பிரச்சினை ஏற்பட்டதாம். இதனால் வடிவேலு படிக்காதவன் படத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, விவேக் சேர்க்கப்பட்டாராம்.

அதேபோல் வடிவேலுக்கும் சிங்கமுத்துவிற்கும் பிரச்சனை உள்ளது என்றும் பரவலாக பேசப்பட்டது. மறுபுறம் ‘ராஜா’ படத்திலிருந்து அஜித்திற்கும் வடிவேலுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சரத்குமார்- சிவகுமார்: சரத்குமார் மற்றும் சிவக்குமார் ஆகியோர் இடையே உள்ள பிரச்சனைக்கு காரணம் என்னவென்றால் சிவகுமார் ராதிகாவிடம் சென்று, ‘உங்க அனைத்து சொத்தும் சரத்குமாருக்கா?’ என்று கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாம்.

அதுமட்டுமில்லாமல், இதை அரசியல் கூட்டமொன்றில் ‘தைரியம் இருந்தால் என்னிடம் வந்து கேளு. என் பொண்டாட்டி கிட்ட போய் கேட்ட’ என சரத்குமார்சிவக்குமாரை திட்டியதாகவும் கூறப்படுகிறது.