Tamil Cinema News | சினிமா செய்திகள்
தியேட்டர்களில் தரமாக களமிறங்கும் 6 புதிய படங்கள்.. லாக் டவுனுக்கு பின் ரசிகர்களுக்கு அட்டகாசமான தீபாவளி ட்ரீட்!
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடியிருந்தன. மேலும் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளை திறப்பதற்காக தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், விபிஎஃப் கட்டண விவகாரத்தால் தியேட்டர் ஓனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக திரையரங்குகளில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆகையால் தியேட்டர்களில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களான சிவாஜி, பாபநாசம், துப்பாக்கி, பிகில், விஸ்வாசம், அசுரன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தாராள பிரபு, பரியேறும் பெருமாள், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் திரையிடப்பட்டன.
ஆனால் தற்போது தீபாவளிக்கு புது படங்களை திரையிட போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளது பொதுமக்கள் பலரை உற்சாகபடுத்தி உள்ளது.
அதாவது விபிஎஃப் கட்டண பிரச்சனையில், தற்காலிக தீர்வாக இரு வாரத்திற்கான விபிஎஃப் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது கியூப் நிறுவனம். இதனால் இரு வாரங்களுக்கு புதிய தமிழ் படங்கள் வெளியாகும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

irandam-kuthu-2
இந்தநிலையில் 6 புதிய படங்கள் தீபாவளிக்கு ரிலீசாக போவதாக தகவல் வெளியாகி வருகின்றன.
தீபாவளிக்கு வெளியாகும் புதுப் படங்களின் லிஸ்ட் இதோ:
- பிஸ்கோத்
- இரண்டாம் குத்து 2
- தட்றோம் தூக்குறோம்
- பச்சைக்கிளி
- மரிஜுவானா
- கோட்டா
எனவே, பல மாதங்கள் கழித்து தியேட்டர்களில் திரையிடப்பட உள்ள புது படங்களை காண மக்கள் ஆர்வத்துடனும் ஆவலுடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

piskoth-cinemapettai
