நெட்ஃபிலிக்ஸ் 400 கோடிக்கு மேல் தட்டி தூக்கிய 5 படங்கள்.. அஜித் சம்பளத்தை அப்படியே கொடுத்துட்டாங்க!

List of 5 tamil movies will be released on netflix ott platform: தென்னிந்திய சினிமாவில் கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையினருக்கும் மக்களுக்கும் இடையே பொழுதுபோக்கு பாலமாக அமைந்தது ஓ டி டி தளங்களே. கொரோனா காலகட்டதிற்கு பின் திரையில் திரையிடப்படும் படங்கள் நான்கு வாரங்களுக்கு பின்னே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்ற நிபந்தனையுடன் படங்கள் வெளி வர துவங்கின.

சென்ற ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் லியோ, துணிவு, மாமன்னன் போன்ற படங்கள் வெளியாகி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிக பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எனவும் தென்னிந்தியாவின் படங்களின் மூலமாகவே நெட்ஃபிலிக்ஸ் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்தது எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தினர்.

இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவின் படங்களை அதிக விலை கொடுத்தாவது வாங்கி தனது தளத்தில் ரிலீஸ் செய்வது என திட்டம் போட்டு அதனை செயல்படுத்தியும் வருகின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 இல் ஆண்டு வெளியாகும் படங்களின் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்

இந்தியன் 2 மற்றும் 3:  லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உருவாகி உள்ள கமலின் இந்திய 2 மற்றும் 3 படங்களின் உரிமையை சுமார்  200 கோடிக்கு வாங்கி உள்ளது.

SK 21: உலகநாயகன் கமலின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் SK 21 ஐ 50 கோடிக்கு ஒப்பந்தம் பேசிய உள்ளது.

Also read: கமலை மிஞ்சிய அஜித்தின் சம்பளம்.. ரகசியமாய் நடத்தபட்ட ஏகே படத்தின் பூஜை

விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் அஜித்தின் விடாமுயற்சியை 105 கோடிக்கு வாங்கியதன் மூலம், அஜித்தின் மொத்த சம்பளத்தையும் நேர் செய்து உள்ளது இந்நிறுவனம். விடாமுயற்சியின் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் என அனைத்து உரிமையையும் வாங்கி ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.

தங்கலான்: பா ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் தயாராகியுள்ள தங்கலான் படத்தின் உரிமையினை 35 கோடிக்கு வாங்கியுள்ளது.

மகாராஜா: ஹீரோவாக தொடர் தோல்விகள் கொடுத்த விஜய் சேதுபதிக்கு திருப்பத்தை கொடுக்க இருக்கும் படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்தை 30 கோடிக்கு விலைபேசி உரிமத்தை தக்க வைத்து உள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.

Also read: நமத்து போன படம்னு பாதியிலேயே நிறுத்திய கமலின் 5 படங்கள்.. அஜித்தின் இயக்குனருக்கு போட்ட கோவிந்தா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்