இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் 16 படங்கள்.. ஜப்பானுக்கு டஃப் கொடுக்குமா முரட்டு கிடா?

List of 16 films releasing on OTT this week: தியேட்டர்களைப் போலவே ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளத்திலும் நிறைய படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகிறது. ஆனால் இந்த வாரம் மட்டும் மொத்தமாக 16 படங்களை ஓடிடியில் ஸ்ட்ரிமிங் செய்து தெறிக்க விட்டுள்ளனர். அதிலும் தியேட்டரில் மொக்கை வாங்கிய கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் இப்பொழுது ஓடிடியில் கல்லாகட்டி விடுவோம் என்ற நம்பிக்கையில் டிசம்பர் 11ம் தேதி நெட் பிளிக்ஸில் ரிலீஸ் செய்துள்ளனர். அதேபோல் ‘தி மிஷன்’ என்கின்ற ஆங்கில டாக்குமெண்ட்ரி படமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் டிசம்பர் 11ம் தேதி வெளியானது. ‘Kevin Hart & Chris Rock: Headliners Only’ என்ற படம் நெட் பிளிக்ஸில் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீசானது.

‘Asteroid City’ என்ற காமெடி திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 13-ம் தேதி ரிலீஸ் ஆனது. இங்கிலாந்து இளவரசி எலிசபெத்தின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய வெப் சீரிஸ் ‘The Crown Season 6: Part 2’ நெட்பிளிக்ஸிலும், தெலுங்கில் வெளியான க்ரைம் திரில்லர் படமான ‘வியூஹம்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.

அதேபோல் ரா. வெங்கட் இயக்கிய குடும்ப செண்டிமெண்ட் படமான ‘கிடா’ திரைப்படம் நாளை ஆஹா என்கின்ற ஓடிடி தளத்தில் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் தீபாவளிக்கு தனது பேரன் விரும்பிய புது ஆடையை வாங்கித் தருவதற்கு தாத்தா ஒரு ஆட்டை விற்க முடிவு செய்கிறார். ஆனால் ஆடு காணாமல் போகிறது, அது அவரது நம்பிக்கையை மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள சிலரின் நம்பிக்கையையும் சிதைக்கிறது. இப்படிப்பட்ட எதார்த்தமான கதைக்களத்தில் காளி வெங்கட் மற்றும் பூ ராம் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.

Also Read: லோகேஷுடன் நேருக்கு நேர் மோதும் மன்சூர்.. டிசம்பர் 15-ஐ குறிவைக்கும் 8 படங்கள், வெற்றி யாருக்கு.?

இந்த வார ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் 16 படங்களின் லிஸ்ட்

மேலும் ‘ராக்ஷஸ காவ்யம் என்கின்ற தெலுங்கு படம் ஒரு போலீஸ் அதிகாரியின் புலனாய்வு திரில்லர் படம் ஆஹா என்ற தளத்திலும், ‘One Piece Flim Red ‘என்ற கார்ட்டூன் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும், அதேபோல் ‘Sesham Mike-il Fathima’ என்ற மலையாள காமெடி திரைப்படமும் டிசம்பர் 15ஆம் தேதி மலையாளம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் டாக்குமென்டரி படம் தான் ‘கூச முனுசாமி வீரப்பன்‘ என்கிற வெப் சீரிஸ். இதில் வீரப்பன் உயிரோடு இருந்த போது எடுக்கப்பட்ட ஒரிஜினல் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வெப் தொடர் ஜீ5-ல் டிசம்பர் 15ஆம் தேதியான இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.

‘The Freelancer Season 1: Part 2’ என்ற திரில்லர் படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரிலும், ‘Detective Knight: Independence என்ற ஹாலிவுட் திரைப்படம் லைன்ஸ் கேட் ப்ளே (lionsgate play) என்ற ஓடிடி தளத்திலும், ‘Reacher Season 2’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் Death’s Game என்ற கொரியன் டிராமாவும் அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அதை போல் நவம்பர் மாதத்தில் திரையரங்கில் வெளியான ‘ஃபேமிலி’ என்கின்ற மலையாள திரைப்படம், இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. இதில் ஒரு மலையாள குடும்பம் ஆன்மீக யாத்திரையின் போது, தங்கள் வீட்டு பெரியவரை தொலைத்து விடுகின்றனர். பின்பு எப்படி கண்டுபிடித்து பத்திரமாக வீடு வந்து சேர்கிறார்கள் என்பதை காட்டியுள்ளனர். இதில் பாசில் ஜோசப் மற்றும் மஞ்சு பிள்ளை முக்கிய இடத்தில் நடித்திருந்தனர். படத்தை நிதிஷ் சகதீப் இயக்கியுள்ளார்.

Also Read: வயிறு குலுங்க சிரிக்க வைத்து பெயர் தெரியாமல் போன 5 காமெடியன்ஸ்.. 100 படங்களுக்கு மேல் நடித்த சாம்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்