Connect with us
Cinemapettai

Cinemapettai

ileana-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எந்தெந்த நடிகர்கள் எல்லாம் படுக்கைக்கு அழைத்தார்கள் தெரியுமா.? லிஸ்ட் போட்ட இலியானா

பாலியல் தொல்லைகொடுக்கும் நடிகர்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வர அனைத்து நடிகைகளும் போராட முன் வந்தால் அவர்களின் பெயர்களை நான் வெளியிட தயார் என கூறியுள்ளார் நடிகை இலியானா. தமிழில் நண்பன், கேடி படத்தில் நடித்த இலியானா தெலுங்கில் பல படத்தில் நடித்து ஒரு ரவுன்ட் வந்தார் சில வருடத்திற்கு முன் தென்னிந்திய படத்திற்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட்டுக்கு சென்றார்.

அதன் பிறகு தென்னிந்திய படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை ஹிந்தியில் தற்பொழுது அஜய் தேவ்கனுடன் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது அதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இலியானா அங்கு சில பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தென்னிந்தியாவில் உள்ள படத்தில் என்னை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள் நடிப்பை வெளிபடுத்த எந்த ஒரு கதாபாத்திரமும் அளிக்கவில்லை, ஒரு நேரத்தில் இதில் கடுப்பாகி ஹிந்திக்கு நடிக்க வந்தேன். இங்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கிடைகிறது அதே நேரம் மிகவும் பயம் தோன்றுகிறது ஏன் என்றால் இங்கு நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச் பெயரில் படுக்கைக்கு அழைக்கும் நிகழ்வு நடக்கிறது சில நடிகர்கள் இதை செய்கிறார்கள் என கூறியுள்ளார்.

அவர்கள் யார் என்பது எனக்கு தெரியும் அவர்களை பற்றி சொன்னால் இங்கு எனக்கு வேலை செய்ய வாய்ப்புகள் கிடைக்காது இதுநாள் வரை சம்பாதித்ததை என்னால் இழக்க முடியாது என இலியானா கூறினார், ஹாலிவுட்டில் பல நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததை அம்மபல படுத்தியது போல் இங்குள்ள நடிகைகள் ஓன்று திரண்டு முன்வந்தால் படுக்கைக்கு அழைக்கும் நடிகர்களின் லிஸ்ட்டை வெளியிட நான் தயார் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top