கமல் நடித்த படம் என்றாலே எப்படி யாவது ஒரு உதட்டு முத்தக்காட்சி இருக்கும் என்பது எழுதப்படாத விதி யாக இருந்து வந்தது. 1980 -90களில் கமல் நடித்த பெருவாரியான படங் களில் முத்தக்காட்சி இடம் பெற்று வந்ததால், அதற்காகவே தியேட்டர்களுக்கு விசிட் அடித்த ரசிகர்களும் உண்டு.

இது கே.பாலசந்தர் இயக்க த்தில் அவர் நடித்திருந்த புன்னகை மன்னன் படத்தில் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்யும் காட்சியில் ரேகாவுக்கு கடைசி முத்தமாக உதட்டுமுத்தத்தை கொடுக்கும் கமல் , அதுபற்றி முன்கூட்டியே அவரிடம் சொல்லாமலேயே அந்த காட்சியில்
நடித்ததாககூட அந்த சமயங்களில் பெரிய பேச்சாக‌ இருந்தது.

அன்று தொடங்கிய கமலின் முத்த‍ வேட்டை 90 களில் அதிகரித்தது. இதனால் மிகுந் த சர்ச்சையில் சிக்கினார். அந் தளவுக்கு கதைக்கு அவசிய மான இடத்தில் உடன் நடிக்கும் கதாநாயகிக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முத்தக் காட்சியில் நடித்திருப்பார் கமல்.

பின் நாளடைவில், முத்தக் காட்சிகள் கமல் படங்களில் இடம்பெறுவது குறைந்தது. கமலுக்கு குறைந்தது ஆனால் இவர் இப்பொழுது கொஞ்சம் தூக்கலாக ஆரம்பித்துள்ளார்.

சித்தார்த் இறுதியாக நடித்த ஜில் ஜங் ஜக் படத்தையடுத்து ‘அவள்’ என்ற பெயரில் திகில் பேய் படம் தயாரித்து நடிக்கிறார். ஆண்ட்ரியா ஹீரோயின். மிலிந்த் இயக்குகிறார். இதுபற்றி சித்தார்த் கூறும்போது,’ஹாலிவுட் பேய் படங்களை பார்த்தவர்கள் இதுபோல் தமிழில் எடுக்க மாட்டேன்கிறார்களே என்கின்றனர்.

அந்த குறையை இப்படம் போக்கும். படம் பார்ப்பவர்கள் கண்டிப்பாக பயப்படுவார்கள். இப்படியொரு பெரிய படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு, வியாகம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்ததால் சாத்தியமானது’ என்றார்.

ஆண்ட்ரியா கூறும்போது,’எனக்கு பேய் படம் என்றால் பயம். இந்த பேய் படத்தில் நான் நடித்திருந்தாலும் அதை நான் பார்க்க மாட்டேன்’ என்றார். ஆண்ட்ரியா இப்படி சொன்னதும், ‘நாங்கள் கூட இருக்கிறோம். எங்களுடன் பாருங்கள்’ என்று சித்தார்த் அவரை சமாதானம் செய்தார். அப்படியும், ‘நான் பாக்கமாட்டேம்மா’ என்று நழுவினார்.

இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் ஆண்ட்ரியா உதட்டை கவ்வி பலமுறை சித்தார்த் தரும் லிப் டு லிப் முத்தக்காட்சியில் கமலையே மிஞ்சிவிட்டார் என்ற ரேஞ்சுக்கு அழுத்தமான முத்திரை பதித்திருக்கிறார்.

ஸ்ட்ராங்கான லிப் டு லிப் முத்தமாக இருக்கிறதே என்று சித்தார்த்திடம் கேட்டபோது, ‘ஹாலிவுட் பாணி என்பதால் அதே பாணியில் லிப் டு லிப் முத்தம் கொடுத்தேன்’ என்றார்.