fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

லிங்குசாமியின் அடுத்த படம் இதுதான்.. வேட்டையாட வெறித்தனமாக ரீமேக் படத்துடன் ரீ என்ட்ரி

lingusamy-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லிங்குசாமியின் அடுத்த படம் இதுதான்.. வேட்டையாட வெறித்தனமாக ரீமேக் படத்துடன் ரீ என்ட்ரி

ஒரு காலத்தில் மாஸ் இயக்குனராக இருந்து பின்னர் தமாஷ் இயக்குனராக மாறியவர் தான் லிங்குசாமி. அஞ்சான் என்ற ஒற்றை படத்தின் மூலம் தன்னுடைய மொத்த மார்க்கெட்டையும் இழந்து திண்டாடி கொண்டிருக்கிறார்.

இதை அவரே பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். அஞ்சான் படம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை பெறாததால் தனக்கு நிறைய சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து மீளமுடியாமல் தற்போது வரை தடுமாறி வருவதாகவும் கூறியுள்ளார்.

அஞ்சான் படத்தினால் மட்டும் லிங்குசாமியின் கேரியர் காலியாகவில்லை. இயக்குனராக மட்டுமே லிங்குசாமி இருந்திருந்தால் தப்பித்திருப்பார் எனவும், அவசரப்பட்டு படத் தயாரிப்பில் இறங்கியதுதான் அவரை மொத்தமாக முடக்கி விட்டது எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

அஞ்சான் படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் மூன்று வருடங்கள் கழித்து சண்டக்கோழி 2 என்ற படம் வெளியானது. ஆனால் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தான் ஆள் இல்லை. இதனால் மனமுடைந்து போய் விட்டார்.

இந்நிலையில் அடுத்ததாக ராகவா லாரன்ஸுடன் ஒரு படத்தின் களம் இறங்க உள்ளாராம். தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ராம் சரணின் ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

rangastalam-remake

rangastalam-remake

இந்தப் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தான் யார் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபித்து காட்டுகிறேன் என சபதம் போட்டுள்ளாராம் லிங்குசாமி. ஆனால் ராகவா லாரன்ஸ் தற்போதைக்கு பல படங்களில் பிசியாக இருப்பதால் ரங்கஸ்தலம் ரீமேக் லேட் ஆகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top