Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஞ்சான் படத்திற்கு பிறகு 6 வருடமாக ஒரு வெற்றி கூட இல்லாமல் தடுமாறும் லிங்குசாமி.. கைகொடுத்த பிரபல நடிகர்!
ஒரு காலத்தில் லிங்குசாமி என்றாலே வெற்றி என்ற அர்த்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த காலத்தில் அஞ்சான் என்ற படம் அவரது வாழ்க்கை தலையெழுத்தையே மாற்றி அமைத்துவிட்டது.
அஞ்சான் படத்தில் அப்படி என்ன குறை என்று தெரியாமல் சூர்யாவின் ரசிகர்கள் இன்னமும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள். அதன்பிறகு லிங்குசாமியின் சினிமா கேரியர் அப்படியே டிராப் ஆகிவிட்டது.
லிங்குசாமிக்கு மட்டுமல்ல சூர்யாவின் கேரியருக்கும் அந்த படம் மிகப்பெரிய அடியாக அமைந்து அவரது அடுத்தடுத்த படங்கள் தற்போது வரை எழ முடியாமல் தடுமாறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு சில படங்கள் லிங்குசாமி எடுத்தாலும் அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போதைக்கு இயக்கம் வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார்.
ஆனால் தற்போது தன்னை நிரூபிக்கும் வகையில் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே படத்தை தயாரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் கன்னட சினிமாவின் வசூல் மன்னன் என்றால் சும்மா விடுவாரா.
அதிரடியாக களம் இறங்கிவிட்டார் லிங்குசாமி. கேஜிஎஃப் படத்தின் மூலம் உச்சம் தொட்டவர் நடிகர் யாஷ். அவரை வைத்து தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளார் லிங்குசாமி.
வரணும், பழைய பன்னீர்செல்வமாக மீண்டு(ம்) வரணும்
